அன்னவர் தம்மொடும் - (அந்த மாபக்கன் புகைநிறக் கண்ணன்) தம்முடன் (இராவணன்); மின்னு படைக்கை - ஒளி விடுகின்ற படைக்கலங்களைக் கையில் கொண்ட; ஐ இரு வெள்ளம் - பத்து வெள்ளம்; அரக்கரை விட்டான் - அரக்க வீரர்களை அனுப்பினான்; சொன்ன தொகைக்கு அமையானை - முன்னால் கூறிய காலட்படைக்கு) (உரிமையாக) அமைந்த யானைப் படைகளையும்; சுடர்த்தேர் - ஒளியைக் கொண்ட தேர்ப் படையினையும்; துன்னு வயப்பரியோடு - நெருங்கிய வலிமையான குதிரைப் படைகளையும்; தொகுத்தான் - சேர்த்து அனுப்பினான். |
(20) |
8322. | நெய் அழல் வேள்வி நேடும் பகை, நேர் விண் தைவரு சூரியசத்துரு என்பான், பெய் கழல் மாலி, பிசாசன் எனும் பேர் வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான். |
நெய் அழல் வேள்வி நெடும்பகை - நெய் பெய்து செய்யும் வேள்விக்கு பெரிய பகைவன்; (வேள்வியின் பகைஞன்) நேர்விண் தைவரு சூரிய சத்துரு என்பான் - நேராக வானத்தில் பவனி வருகிற சூரியன் பகைஞன் என்பவன்; கழல் பெய் மாலி - கழல் அணிந்த மாலி; பிசாசன் எனும் பேர் வெய்யவன் - பிசாசன் என்னும் பெயர் உடைய கொடியவன்; வச்சிரம் வென்ற எயிற்றான் - வச்சிரத்தை வென்ற (வலிய) பற்களை உடையவன் (வச்சிரத்து எயிற்றவன்). |
(21) |
8323. | என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும் வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார், சென்றன, மால் கரி, தேர், பரி; செல்லக் குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால். |
என்றவரோடும் - என்ற பெயர் கொண்ட அரக்கத் தலைவர்களுடன்; எழுந்து - (மாபக்கனும் புகைநிறக் கண்ணனும் சேர்ந்து) எழுந்து; உலகு ஏழும் வென்றவன் - உலகு ஏழனையும் வென்றவனாகிய (இராவணன்); ஏவலின் - கட்டளைப்படி; சென்றன மால்கரி - சென்றனவாகிய மத மயக்கம் கொண்ட யானைகள்; தேர் - தேர்; பரி - குதிரை; செல்ல - என்பவைகள் செல்ல; குன்று இனம் என்ன நடந்தனர் - மலைகளின் கூட்டம் |