என்று கூறுமாறு நடந்து; கோட்பால் முன்னம் விரைந்தார் - கொள்கையால் முன்னால் விரைந்து சென்றார்கள். |
(22) |
| 8324. | விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர் கண்ணை விழுங்குதலின், கரை காணார்; எண்ணை விழுங்கிய சேனையை, யாரும், பண்ணை விழுங்க உணர்ந்திலர், பண்பால். |
விண்ணை விழுங்கிய தூளியின் - (அவர்கள் நால்வகைப் படையும் செல்லுதலினால் தோன்றிய) வானத்தை மறைக்கும் அளவு எழுந்த புழுதியானது; விண்ணோர் கண்ணை விழுங்குதலின் - தேவர்களின் கண்களை மறைத்ததனால்; கரை காணார் - (அவர்களும் கூடப் படை அளவின்) எல்லையைக் காணாதவராயினர்; எண்ணை விழுங்கிய சேனையை - எண்ணிக்கையின் அளவைக் கடந்த (அந்த அரக்கர்) படை; பண்ணை - அமைந்துள்ள வகையை; யாரும் - எவரும்; பண்பால் - முறையாக; விழுங்க உணர்ந்திலர் - முற்றும் உணராதவராயினர். |
(23) |
| 8325. | கால் கிளர் தேரொடு, கால் வரையோடும், மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச,- மால் கடலானது, மாப் படை-வாள்கள் பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால். |
கால்கிளர் தேரொடு - காற்றுப்போல் விரைந்து செல்லுகின்ற தேர்ப்படையிலும்; கால் வரையோடும் - கால் படைத்த மலை போன்ற யானைப் படையிலும்; மேல்கிளர் பல் கொடி - மேலே விளங்குகின்ற பல கொடிகள் ஆகிய; வெண்திரை வீச - வெண்மையான அலைகள் வீச; வாள்கள் - வாள் படைகள்; மாப்படை - பெரிய படையின்; பால் கிளர் மீனிடை - இடத்து விளங்குகின்ற மீன்போல; ஆடிய பண்பால் - அசைந்து ஆடிய தன்மையினால்; மால் கடலானது - பெரிய கடல் போல விளங்கியது. |
(24) |
| 8326. | பேரி கலித்தன, பேர் உலகைச் சூழ் ஏரி கலித்தன ஆம் என; யானை |