பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 417

கார் இகலிக் கடலோடு கலித்த;
மாரி கலித்தென, வாசி கலித்த.

 

பேர் உலகைச்  சூழ் -  பெரிய  உலகத்தைச்  சூழ்ந்துள்ள;   ஏரி
கலித்தன  ஆம் என
- கடல்கள் ஒலித்தனவாம் எனும் படியாக; பேரி
கலித்தன
 - பேரிகைகள் ஒலித்தன; யானை கார் இகலிக் - யானைகள்
மேகங்களின் (இடி ஒலியோடு) மாறுகொண்டு; கடலோடு கலித்த - கடல்
ஒலிபோல்  ஒலித்தன;  மாரி  கலித்தென  - மழை ஒலித்தது என்னும்
படி; வாசி கலித்த - குதிரைகள் ஒலித்தன.
 
 

                                                (25)
 

8327.சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா,
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக்
குன்று நடந்தனபோல்-கொலை யானை.
 

கொலையானை  - கொல்லும் தன்மை உள்ள யானைகள்; சென்றன
சென்ற  சுவட்டொடு  செல்லா
 -  சென்றனவாகிய (படைகள்) சென்ற
அடிச்சுவட்டினில்    செல்லாமல்;   நின்று   பிணங்கிய   -   நின்ற
இடத்திலேயே  நின்று  மாறுபாடு கொண்டனவும்; கல்வியின் நில்லா -
(பாகர்களின்) சொல்லுக்கு (அடங்கி)  நிற்காதனவும் ஆகி; ஓடைக்குன்று
நடந்தன  போல்
 -  முகபடாம்  அணிந்த மலைகள் நடந்தன போல;
ஒன்றினை  ஒன்று  தொடர்ந்தன -  ஒன்றினை  ஒன்று  தொடர்ந்து
சென்றன.
 
 

                                                 (26)
 

8328.மாக நெடுங் கரம் வானின் வழங்கா,
மேக நெடும் புனல் வாரின, மேன்மேல்,
போக விலங்கின, உண்டன போலாம்-
காக நெடுங் களி யானை களிப்பால்.
 

காக  நெடுங்களி யானை -  காகங்கள்  சூழ்ந்துவரும் பெரிய மதம்
கொண்ட  யானைகள்;  களிப்பால்  - மத மயக்கத்தால்; நெடுங்கரம் -
(தங்களது)  நீண்ட  துதிக்கையை; மாகவானின் -  உயர்ந்த வானத்தில்;
வழங்கா  -  செலுத்தி; மேக  நெடும்  புனல்  வாரின - மேகங்களில்
உள்ள மிகுதியான நீரினை வாரி முகந்து; மேன்மேல் போக விலங்கின
- மேன்மேல் போதலைத்