பக்கம் எண் :

418யுத்த காண்டம் 

தவிர்த்தனவாய்;    உண்டன    போலாம்    -   (அந்த   நீரினை)
உண்பனவாயின.
 

                                                (27)
 

8329.எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர்
அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க,
இரிந்து பேர் இருள், எண் திசைதோறும்.
 

எரிந்து எழு பல்படையின் ஒளி - ஒளிர்ந்து  எழுகின்ற பல்வகைப்
படைக்கலங்களின்  ஒளி;  யாணர்  அருங்கல  மின்ஒளி  - புதியதாக
(வீரர்கள்  அணிந்து  உள்ள)  அரிய   அணிகலன்களின்   மின்னுகின்ற
ஒளி; தேர்  பரி  யானை - தேர், குதிரை, யானை;  பொருந்திய பண்
ஒளி
   -    (ஆகியவற்றுக்குச்   செய்து)   அமைத்த    அலங்காரப்
(பொருள்களின்) ஒளி; தார் ஒளி - பொன் மாலைகளின் ஒளி;  பொங்க
-  (ஆகியவை எங்கும்) மிகுதியாக இருப்பதனால்;  எண்திசை தோறும்
-  எட்டுத் திசைகள் தோறும்;  (செறிந்திருந்த) பேர் இருள் இரிந்தது -
மிக்க இருள் (கெட்டு) ஓடியது.
 
 

                                                 (28)
 

                  வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்
 

8330.எந்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான்,
‘வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி
செய்தவனேகொல்? தெரித்தி இது’ என்றான்;
ஐயம் இல் வீடணன் அன்னது உரைத்தான்:
 

ஈசன்  -   (அனைத்துயிர்க்கும்   உலகங்களுக்கும்  தலைவனாகிய)
இராமன்; எய்திய   சேனையை  எதிர்ந்தான்  - (போர்க்களம்) வந்து
அடைந்த  (அரக்கர்)  படையை  எதிர்கொண்டு கண்டு; வெய்து இவண்
வந்தவன்
- மிகுசினம் கொண்டு  இவ்விடத்துக்கு வந்தவன்; மாயையின்
-  மாயையால்; வெற்றி செய்தவனே கொல் - வெற்றியை உண்டாக்கிக்
கொண்ட இந்திரசித்தன் தானோ? இது தெரித்தி என்றான் - இதனைத்
தெரிவிப்பாய்  என்று   கேட்டான்;  ஐயம்  இல்வீடணன் - (வந்தவன்
யாவன்  என்பதை)   ஐயம் இல்லாமல் உணர்ந்தவன் ஆகிய வீடணன்;
அன்னது உரைத்தான் - அது பற்றிச் சொன்னான்.
 
 

                                                (29)