பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 419

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

8331.‘முழைக் குலச் சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது
                                        என்ன,
புழைப்   பிறை   எயிற்றுப்  பேழ்  வாய்,  இடிக்  குலம்
                                 பொடிப்ப, ஆர்த்து,
தழைப் பொறி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி,
                                        சார்வான்.
மழைக் குரல் தேரின் மேலான், மாபெரும்பக்கன் மன்னோ.
 

முழைக்குலச்சீயம்  -  குகையில் வாழுகின்ற சிங்கம்;  வெம்போர்
வேட்டது  முனிந்தது  என்ன
 - கொடிய போரினை விரும்பிச் சினங்
கொண்டது  என்னும்படி; புழைப்பிறை - பிளவு பட்ட பிறை  போன்ற;
எயிற்றுப்   பேழ்வாய்   -   பற்களை  உடைய  பிளந்த  வாயினால்;
இடிக்குலம்   பொடிப்ப   ஆர்த்து    -   இடிகளின்    கூட்டமும்
பொடியாகும்படியாகப்   பேரொலி   செய்து;  பொறி    தழைவாளிப்
புட்டில்கட்டி
  -  நெருப்புப்  பொறியினை  மிகுதியாகக்   கக்குகின்ற
அம்புகள்   (நிறைந்த)   அம்பு   அறாத்தூணியை   (முதுகில்  கட்டி);
வில்தாங்கி  -  வில்லைப் பிடித்து;  மழைக்குரல் தேரின்  மேலான்
சார்வான்
 -  இடிபோன்று  (சக்கரங்கள்)  ஒலியை எழுப்பும்  தேரின்
மேலேறியவனாய்    வருபவன்;    மாபெரும்பக்கன்  -    மாபக்கன்
(என்பவன்). மன், - அசைநிலை.
 
 

                                                (30)
 

கலி விருத்தம்
 

8332.‘சிகை நிறக் கனல் பொழி தெறு கண் செக்கரான்,
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்,
நகை நிறப் பெருங் கடைவாயை நக்குவான்,
புகைநிறக்கண்ணவன், பொலம் பொன் தேரினான்.
 

சிகை  நிறக்கனல் - தன் தலைமுடியின்  செந்நிறமுள்ள நெருப்பை;
பொழி - வெளியிடுகிற; தெறுகண் - அழிக்கவல்ல கண்கள்; செக்கரான்
-  சிவந்த  நிறமாக  உள்ளவனும்;  பகை நிறத்தவர் - பகைத் தன்மை
கொண்டவர்களுடைய;  உயிர்  பருகும்   பண்பினான்  -  உயிரைக்
குடிக்கும் தன்மை உள்ளவனும்;   நகைநிறப்  பெருங்கடை வாயை -
சிரிப்போடு கூடிய நிறம் பொருந்திய (தன்)