எயிற்று - வருத்தும் தன்மை கொண்ட வெண்மையான பற்களையும்; அரக்கியர் - உடைய அரக்கியர்கள்; களத்து வந்து அடைந்தார் - போர்க்களத்துக்கு வந்து அடைந்தவர்களாகி; குணம் கொளும் - (தங்களிடம்) அன்பு எனும் பண்பு கொண்டிருந்த; தம் - தங்களுடைய; துணைக்கணவர் - துணையாகிய கணவர்களுடைய; பசுந்தலை கொடாது - பசுந்தலையை உண்பதற்காகக் கையில் கொண்டு கொடுக்காமல்; பிணங்கு பேய்களின் - மாறுபடுகின்ற பேய்களின்; வாய்களைப் பிடித்தே பிளந்தனர் - வாய்களைப் பிடித்துப் பிளந்தனர். | (61) | 8363. | சுடரும் வெள் வளைத் தோளி, தன்கொழுநனைத் தொடர்வாள், உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள் குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள, தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள். | சுடரும் வெள் வளைத்தோளி - ஒளி விடுகிற வெள்ளிய வளையல்களை அணிந்த தோள்களை உடையாள் ஒருத்தி; தன் கொழுநனைத் தொடர்வாள் - தன் கணவனைப் (போர்க்களத்தில் தேடித்) தொடர்ந்து சென்றவள்; உடரும் அங்கமும் கண்டு - (அங்கு அவனது) உடலினையும் (கை, கால் முதலிய) உறுப்புகளையும் பார்த்து; கொண்டு ஒருவழி உய்ப்பார் -(அவற்றை எல்லாம் திரட்டிக்) கொண்டு (வந்து) ஓரிடத்தில் சேர்ப்பவள்; ஓர் குறு நரி - ஒருசிறிய நரி; குடரும் ஈரலும் கண்ணும் கொள்ள - குடலையும், ஈரலையும், கண்ணையும் தூக்கிச் செல்ல; தொடர ஆற்றலள் - அதனைத் தொடர்ந்து செல்லும் வலிமை அற்றவளாகி; நெடிது உயிர்த்து - பெருமூச்சு விட்டு; ஆர் உயிர் துறந்தாள் - தனது அரிய உயிரை விட்டாள். | (62) | 8364. | பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள் நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா |
|
|
|