| படைத் தலைவர் வதைப் படலம் | 435 |
| இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த அரிய,, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார். | பெரிய வாள் தடங்கண்ணியர் - நீண்ட வாள் போன்ற கண்களை உடைய மகளிர்; தம் கணவர் தம் - தங்கள் கணவர்களுடைய; பெருந்தோள் நரிகள் ஈர்த்தன - பெரிய தோள்களை நரிகள் இழுத்துச் சென்றனவாக; வணங்கவும் - (அவை) வணங்கிக் கேட்கும்; இணங்கவும் - இணக்கமாகக் கேட்டும்; நல்கா - (அத்தோள்களைக்) கொடுக்காமல்; இரியல் போவன தொடர்ந்து - ஓடுகின்ற அவற்றைத் தொடர்ந்து (போய்); அயல் கிடந்த இனப்படை அரிய - அருகில் விழுந்து கிடந்த தொகுதியாய் உள்ள படைக்கலங்கள் (தங்கள் கால்களை) அறுத்திட; அலத்தகச் சீறடி - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிறிய அடிகள்; நொந்திலர் அயர்ந்தார் - ஓடி வருந்தாராய் அயர்ந்து நின்றனர். | (63) | 8365. | நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி, விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலார், அலங்கல் ஓதியர்,-அருந் துணை பிரிந்து நின்று அயரும், பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன போன்றார். | தம் துணைக் கணவரை நாடி - தங்களுக்குத் துணைவனாய் அமைந்த கணவரைத் தேடி; விலங்கல் அன்ன - மலையைப் போன்று; வான் பெருங் குப்பையின் மேலார் - உயர்ந்த பிணக் குவியலின் மேலேறி நின்றவர்களான; அலங்கல் ஓதியர் - மாலையை அணிந்த கூந்தலையும்; நலம் கொள் நெஞ்சினர் - நன்மையை (விரும்பிக்) கொண்ட நெஞ்சினையும் (உடைய அரக்க மகளிர்); அருந்துணை பிரிந்து - (தம்) அருமையான துணையாகிய (ஆண் மயிலைப்) பிரிந்து; நின்று அயரும் - நின்று சோருகிற; பொலம் கொள் - அழகு கொண்ட; மாமயில் - பெரிய (பெண்) |
|
|
|