பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 439

பாழிப்புயம் - (அனுமன்தன்) வலிமை உள்ள தோள்களில்; அம்பு
உருவப்படலும்
  -   அம்பானது  உருவும்  படியாகப்பட்ட  உடனே;
வீழிக்கனி போல் - வீழிக்கனியினைப் போல்; புனல் வீச - குருதி நீர்
(அங்கிருந்து)  வெளிப்பட;  ஊழிப்பெயர்  -  உலக அழிவுக்காலத்தில்
உலவுகிற; கார்நிகர்  -  மேகத்தைப்  போன்று;  ஒண்  திறலான்  -
பெருவலி  படைத்த  அனுமன்;  வெகுண்டு  - சினம் மிகக் கொண்டு;
ஆழிப்பெருந்தேரை - (அந்தப் புகை நிறக்கண்ணனுடைய) சக்கரத்தை
உடைய பெரிய தேரை; அழித்தனனால் - அழித்தான்.
 

                                                 (70)
 

8372.சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான்.

 

சில்லி  -  சக்கரத்தை  உடைய;  பொருதேர்  சிதைய  -  போர்
செய்வதற்கு   உரிய   (தன்)  தேர்  அழிந்ததனால்;  சிலையோடு  -
வில்லுடன்;  எல்லின்  பொலிவிண்ணின்  - சூரியனால் அழகு பெற்று
விளங்கும்  ஆகாயத்தின்  கண்;  விசைத்து  எழுவான்  -  வேகமாக
எழுபவனாகிய;   (புகை  நிறக்கண்ணனுடைய)  வில்  -  (கை)  வில்;
இலக்குவன்   -  இலக்குவன்;  வெங்கணையால்  -  (எய்த)  கொடிய
அம்பினால்;  இற்றது  -  அழிந்தது; நேர் பொருவான் - (அவனுடன்)
நேரே போர் செய்பவன் ஆகிய (அனுமன்); புல்லித்தரை இட்டனன் -
(அவனைத்) தழுவி (இழுத்துத்) தரையில் இட்டான்;
 

                                                  (71)
 

                                        அனுமன் கொல்லுதல்
 

8373.மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
அலையின், பருகிப் பரு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால்.

 

மலையின்    பெரியான் - மலையினும் பெரிய உடலுடையவனான
(புகை  நிறக்கண்ணனுடைய);  உடல்  மண்ணிடை  இட்டு  - உடலை
மண்ணில்  போட்டு; கடல் தாவிய கால்கொடு - கடலைத் தாவிய தன்
கால்களைக் கொண்டு; உலைய உதைத்து - (அழிந்து