உயிர்) வற்றும்படியாக உதைத்து; பருவாய் அனல் கால்தலை - பெரிய வாயில் தீயை உமிழ்கின்ற தலையினை; கைக்கொடு பருகி - (தன்) கையைக் கொண்டு பறித்து; அலையின் எறிந்து - கடலின் கண் எறிந்து; தணிந்தனனால் - சினமாறினான். |
(72) |
அங்கதன் மாபக்கன் போர் |
8374. | மாபக்கனும் அங்கதனும் மலைவார், தீபத்தின் எரிந்து எழு செங் கணினார், கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார், தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால். |
மலைவார் - போரிடுகின்றவர்களான; மாபக்கனும் - மாபக்கன் என்பவனும்; அங்கதனும் - அங்கதன் என்பவனும்; தீபத்தின் எரிந்து எழு - விளக்கைப் போல் எரிந்து எழுகின்ற; செங்கணினார் - சிவந்த கண்களை உடையவர்களாய்; கோபத்தினர் - சினத்தினை உடையவர்களாய்; தூபத்தின் உயிர்ப்பர் - தூபத்தைப் போல் புகை வெளிப்படுகிற பெரு மூச்சினை உடையவர்களாகி; கொல்ல நினைந்து - ஒருவரை மற்றொருவர் கொல்லுவதற்கு எண்ணி; அடர்வார் தொடர்ந்தனரால் - அழித்துக் கொல்லுவதற்காகத் தொடர்ந்தார்கள்; |
(73) |
8375. | ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான்- வெம்பி, களியோடு விளித்து எழு திண் கம்பக் கரி, உண்டை கடாய் எனவே. |
மொய் தொழிலான் - நெருங்கி வந்து போர் செய்த மாபக்கன்; வெம்பி - சினந்து; கனியோடு - மது மயக்கத்தோடு; விளித்து - பேரொலி செய்து; எழு - எழுகின்ற; திண் கம்பக்கரி - வலிமையான கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த யானை; உண்டை கடாய் எனவே - மண் உருண்டையை விரைவாக வீசியதைப் போல்; ஐம்பத்தொரு வெங்கணை - ஐம்பத்தொரு கொடிய அம்புகளை; அங்கதன் - அங்கதனது; மாமொய்ம்பில் - அகன்ற வலிமை உள்ள மார்பில்; புகஉய்த்தனன் - புகும் படியாகச் செலுத்தினான். |
(74) |