வானவர் தம் கோமானொடு - தேவர் தலைவனாம் திருமாலின் அவதாரமாகிய நரசிங்கத்தோடு; தானவர் கோன் - தானவர் தலைவனாகிய இரணியன்; இகலே ஆமாறு - செய்த போரே ஒப்பாகுமாறு; மலைந்தனர் - போர் செய்தனர்; என்று இமையோர் - என்று கூறி விண்ணவர்கள்; பூ மாரி பொழிந்து - பூ மழை பொழிந்து; புகழ்ந்தனரால் - புகழ்ந்தனர். |
(79) |
8381. | கல் ஒன்று கடாவிய காலை, அவன் வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும், அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய், ‘நில்!’ என்று இடை சென்று, நெருக்கினனால். |
கல் ஒன்று கடாவிய காலை - (நீலன்) கல் ஒன்றை எடுத்துச் செலுத்திய பொழுது; அவன் வில் ஒன்று - (அது) அந்த மாலியினுடைய வில் ஒன்றை; இருகூறின் விழுந்திடலும் - இரண்டு துண்டாக விழுந்திடச் செய்யவும்; அல் ஒன்றிய வாளொடு - (மாலி) ஒளி நிறைந்தவாளுடன்; தேரினன் ஆய் - தேர் மேல் ஏறியவனாகி; நில் என்று - (நீலனைப் பார்த்து) நில் என்று சொல்லி; இடை சென்று - அவனிடத்தில் சென்று; நெருக்கினனால் - போரிடல் ஆனான். |
(80) |
8382. | அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே, மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா, கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா, எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால். |
அற்று - அப்பொழுது; அத்தொழில் எய்தலும் - அச்செயல் நிகழும் அளவில்; அக்கணனே - அக்கணமே; மற்றப்புறம் நின்றவன் - மற்றொரு இடத்தில் நின்றவனாகிய; கொற்றக்குமுதன் - வெற்றியை உடைய குமுதன் என்பவன்; ஒரு குன்று கொளா - ஒரு குன்றினைக் கையில் கொண்டு; வந்து அணுகா - வந்து நெருங்கி; எற்ற - அடிக்க; பொருதேர் - போரிடுவதற்குரிய (மாலியின்) தேர்; பொடி எய்தியதால் - பொடியாகப் (போய்) விட்டது. |
(81) |
நீலன் - மாலி - இலக்குவன் செயல்கள் |
8383. | தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை வாளால் மடிவித்து, வலித்து அடர்வான் |