| தோள் ஆசு அற, வாளி துரந்தனனால்- மீளா வினை நூறும் விடைக்கு இளையான். |
நீலன் - நீலன்; எறிந்ததனை - எறிந்ததாகிய; தாள் ஆர் மரம் - அடி பெருத்த மரத்தை; வாளால் மடிவித்து - (தன்) வாளால் அழித்து; வலித்து அடர்வான் - வலிமையோடு பொருபவன் ஆகிய (மாலியினது); தோள் ஆசு அற - தோளின் மூட்டு அறும்படியாக; மீளா வினை நூறும் விடைக்கு இளையான் - போக்குதற்கு அரிய வினைகளைப் போக்குபவனாகிய இடபம் போன்ற இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன்; வாளி துரந்தனனால் - அம்புகளைச் செலுத்தினான். |
(82) |
இலக்குவன் செயல் |
8384. | மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும் தன் போர் தவிராதவனை, சலியா, ‘என் போலியர் போர்எனின், நன்று; இது ஓர் புன் போர்’ என, நின்று அயல் போயினனால். |
மின்போல் மிளிர் வாளொடு - மின்னலைப்போல் விளங்குகின்ற வாளுடன்; தோள் விழவும் - (தன்) தோள் அறுபட்டுக் (கீழே) விழவும்; தன் போர் தவிராதவனை - (தன்) போரை நீங்காமல் செய்பவனாகிய (மாலியைப் பார்த்து இலக்குவன்); என் போலியர் போர் எனின் நன்று - என் போன்றவருடன் செய்யும் போர் என்றால் அது நல்லது; இது ஓர் புன்போர் - இது ஒரு புன்மையான போர் ஆகும்; என சலியா - என்று (கூறி) வெறுத்து; நின்று - நின்று; அயல் போயினனால் - அப்பால் போயினன். |
ஒப்பாகாதவனுடன் பொருதல் தகாது என இலக்குவன் அயல் போயினன் என்க. ஒருவனோடு பலர் பொரும் போர் புன்போர் என எண்ணி அயல் போயினன் எனினும் ஆம். |
(83) |
வானரப்படை வீரர் புகழ்ச்சி |
8385. | நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும், பேர் வீரனை, வாசி பிடித்தவனை, |