பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 445

      ‘யார், வீரதை இன்ன செய்தார்கள்?’ எனா,
போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால்.

 

நீர்     வீரை  அனான்  -  நீரினை  உடைய  கடல்  போன்ற
நிறமுடையவனாகிய   இராமனுக்கு   முன்;   எதிர்  நேர் வரலும் -
(இலக்குவன்)  எதிரில்  நேராக  வருதலும்;  போர்  வீரர்  - வானரப்
படைப்  போர்  வீரர்கள்; போர் வீரனை - புகழுடைய வீரனும்; வாசி
பிடித்தவனை
 - அம்பைத் தாங்கி உள்ளவனும் ஆகிய இலக்குவனை;
யார்   வீரதை   இன்ன   செய்தார்கள் எனா   -   யாவர்   தம்
வீரத்தன்மையால்,   இத்தகைய  செயல்களைச்  செய்தார்கள்  என்று;
உவந்து - மகிழ்ந்து; புகழ்ந்தனரால் - புகழ்ந்தனர்.
 

வீரை - கடல்.
 

                                                 (84)
 

                      இலக்குவன் வேள்விப் பகைஞனை அழித்தல்
 

8386.வேள்விப்பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
‘வாழ்வு இத்தனை’ என்று, அவன் மார்பு அகலம்
்தனன்; ஆர் உயிர் போயினனால்.

 

வேள்விப்    பகையோடு - வேள்வியின் பகைஞன் என்பவனுடன்;
வெகுண்டு  அடரும்  - சினந்து போர் செய்கின்ற; தோள் வித்தகன் -
தோள்  வலிமை  உடைய  இலக்குவன்;  வாழ்வு  இத்தனை என்று -
(உனக்கு) வாழ்வு இத்தனை (அளவு) தான் என்று சொல்லி; அங்கு  ஓர்
சுடர்க்  கணையால்
 -  அப்போது  ஒரு ஒளி விடுகின்ற அம்பினால்;
அவன்  மார்பு அகலம் போழ்வித்தனன் - அவனது பரந்த மார்பைப்
பிளந்தான்;  ஆர் உயிர் போயினனால் - (அவனுடைய) அருமையான
உயிர் நீங்கியது.
 

இப்பாடல்     வேள்வியின் பகைஞன் இறந்து பட்டமை கூறுவது.
அடுத்து  வரும்  “மல்லல் தட மார்பன்” என்ற பாடலில் வேள்வியின்
பகைஞனுடைய  வில்லும்,  தோளும்,  கழுத்தும்,  காலும்  அறுபட்ட
தன்மை  கூறப்பட்டுள்ளது.  முதல் பாடலில் உறுப்பிழந்தமை (6,19,86)
கூறுவதாக  அமைவது  பொருத்தமாகத் தோன்றவில்லை. உறுப்புகளை
இழந்து  இறுதியில்  மார்பு பிளந்து வேள்வியின் பகைஞன் இறந்தான்
எனக்  கொள்ளுவதே  பொருத்தம் உடையதாக இருக்க வாய்ப்புண்டு.
இக்கருத்தை  “இச்செய்யுள் ஒரு பிரதியில் மல்லல் தடமார்பன் என்ற
அடுத்த பாடலின் பின் உள்ளது” என்ற வை.மு.கோவின் குறிப்புரை