பக்கம் எண் :

446யுத்த காண்டம் 

தெளிவு  படுத்துதல் காண்க. இனி, இதில் முரண்பாடு இல்லை.  முதல்
பாடல்  இறந்தான்  எனக்கூற  எவ்வாறு  இறந்தான் என்பதை  வரும்
பாடல்   கூறுவது  பொருத்தமானதே  என்பது  மகாவித்துவான்  வே.
சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
 

                                                 (85)
 

8387.மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
எல்லுற்று உயர் வேள்விஇரும்பகைஞன்
வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும்.

 

மல்லல்     தட மார்பன் - வளப்பம் பொருந்திய பரந்த மார்பை
உடைய (இலக்குவனது); வடிக்கணையால் - கூர்மையான  அம்புகளால்;
எல்லுற்று - ஒளி நிறைந்து; உயர் வேள்வி - உயர்கிற வேள்வித் தீக்கு;
இரும்  பகைஞன் - மிக்க பகைவனாகிய அவனுடைய; வில் அற்றது -
வில்   அழிந்திட்டது;  கழுத்தொடு  -  கழுத்தும்;  கால்களொடும் -
கால்களும்;  மேல்  நிமிரும் தேரொடு  -  மேல் உயர்ந்து விண்ணில்
செல்லும் தேருடன்; கல் அற்ற - கற்களும் அழிந்தன;
 

இப்பாடல்   அவன் இறந்தபடி கூறியது. தேரொடு மேல் நிமிரும் கல்
அறுதல்  -  வேள்வியின்  பகைஞன்  வேள்வி நடத்தும் இடத்துக்குச்
சென்று  விண்ணில்  தேரொடு  நின்று  கற்களை  வீசி வேள்வியினை
அழிப்பான்.  அவன்  இறந்து  பட்டமையால்  இனி அச்செயல் நடை
பெறாது என்பதை இப்பகுதி உணர்த்துகிறது.
 

                                                 (86)
 

                     சுக்கிரீவன் சூரியன் பகைஞனை அழித்தல்
 

8388.தன் தாதையை முன்பு தடுத்து, ஒருநாள்,
வென்றானை, விலங்கலின் மேனியனை,
பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
கொன்றான்-கவியின்குலம் ஆளுடையான்.

 

கவியின் குலம் ஆளுடையான் - வானரக் கூட்டங்களை ஆளடிமை
கொண்ட  சுக்கிரீவன்; முன்பு ஒரு நாள் - முன்பு ஒரு காலத்தில்; தன்
தாதையை   தடுத்து
  -   தன்  தந்தையாகிய  சூரியனைத்   தடுத்து;
வென்றானை  -  வென்றவனும்;  விலங்கலின்  மேனியனை  - மலை
போன்ற   உடம்பினை   உடையவனும்;   பின்றாத   வயத்து  உயர்
பெற்றியனை
  -  பின்னிடாத  வெற்றியால்  உயர்ந்தவனும்  (ஆகிய
சூரியன் பகைஞனை); கொன்றான் - கொன்றான்.
 

                                                  (87)