| முடியும்’ எனும் எல்லையில் முந்தினனால்- ‘நெடியன், குறியன்’ எனும் நீர்மையினான். |
அடியுண்டவன் - அடிபட்டவன் ஆகிய இடபன்; ஆவி குலைந்து - உயிர் வாதனை அடைந்து; அயர்ந்து - துன்பப்பட்டு; இடியுண்ட மலைக்குவடு இற்றது போல் - இடியால் தாக்குண்ட மலை உச்சிகள் அழிந்தது போல; முடியும் எனும் எல்லையில் - அழிந்து விடுவானெனும் அளவில்; நெடியன் குறியன் எனும் நீர்மையினான் - நெடியனும் குறியனும் ஆகும் என்கிற தன்மை உள்ளவனாகிய அனுமன்; முந்தினன் - முன்வந்து தோன்றினான். ஆல் - அசை. |
(90) |
வச்சிரத்து எயிற்றவன் செயல் |
8392. | கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான் அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப் படைத்தானை, நெடும் புகழ்ப் பைங்கழலான் புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற. |
கிடைத்தான் - தன்முன் வந்து தோன்றியவனாகிய; கிளர்வான் அடைத்தான் என - விளங்குகின்ற ஆகாயத்தை அடைத்தவன் என்று (கூறும்படி); மீது உயர் ஆக்கையினை படைத்தானை - மிக உயர்ந்த உடம்பு படைத்தவனாகிய; இகல் மாருதியை - பகைத் தொழில் வல்ல அனுமனை; நெடும் புகழ் பைங்கழலான் - மிக்க புகழை உடைய பசிய வீரக்கழலை அணிந்தவனாகிய வச்சிரத்து எயிற்றன்; அகல் மார்பு பொடிச்சிதற - அகன்ற மார்பு பொடியாகச் சிதறும் படியாக; புடைத்தான் - அடித்தான் |
(91) |
அனுமன் கொல்லுதல் |
8393. | எற்றிப் பெயர்வானை இடக் கையினால் பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா, வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய் முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால். |
எற்றிப் பெயர்வானை - (தன் மார்பு பொடிச்சிதற) அடித்து செல்பவன் ஆகிய வச்சிரத்து எயிற்றவனை; இடக்கையினால் |