பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 449

பற்றி   - (அனுமன்) தன் இடது கையினால்   பிடித்து; கிளர் தண்டு
பறித்து  எறியா
- (அவன் கையில் இருந்த) மூள்கின்ற போர் செய்யும்
தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து விட்டு; வெற்றிக் கிளர் கைக்கொடு
- வெற்றியோடு விளங்குகின்ற (தன்) கையினைக் கொண்டு; மெய் வலி
போய்  முற்ற
 -  (அவனுடைய)  உடல்  வலிமை போய் முடியும்படி;
தனிக்குத்த   -   வலிமையாகக்  குத்த;   முடிந்தனனால்  -  உயிர்
முடிந்திட்டான். ஆல் - அசை.
 

                                                  (92)
 

                                        பனசன் பிசாசன் போர்
 

8394.காத்து, ஓர் மரம் வீசுறு கைக் கதழ் வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால்.

 

காத்து  - (பிசாசன் தன்னைக்) காத்துக்கொண்டு; ஓர் மரம் வீசுறு-
(தன் மேல்) ஒரு மரத்தை வீசுகிற; கைக்கதழ் - கை வேகமுடைய; ஓர்
புலிப்  போத்து  போல்
-  ஒரு புலிப் போத்தைப் போன்றவனாகிய;
பனசன்  புரள  -  பனசன்  என்னும் வானர வீரன் புரளும்  படியும்;
நெடுங் குருதிப் புனல் - மிகுதியான இரத்த வெள்ளம்; கோத்து ஓட
- வழிந்து  ஓடும்   படியும்;   திண்  மாத்தோமரம் - வலிய பெரிய
தோமரம் என்னும்   படைக்கலத்தை;  மார்பின்  வழங்கினனால்  -
(அவனது) மார்பில் விடுத்தான்.
 

                                                 (93)
 

                                           பிசாசனின் வேகம்
 

8395.கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினனோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம்-
போர் மேலினன், வாசி எனும் பொறியான்.

 

போர்  மேலினன்  -  போர்  மேல்  வந்தவனும்;  வாசி  எனும்
பொறியான்
 -  குதிரை  என்கிற இயந்திரத்தை உடையவனும் ஆகிய
பிசாசன்;  கார்  மேலினனோ?  -  மேகத்தின்  மேல் இருக்கிறானோ?
கடல் மேலினனோ - கடல்மேல் இருக்கிறானோ? பார் மேலினனோ?
- நிலத்தின்  மேல் இருக்கிறானோ? பகல் மேலினனோ -   கதிரவன்
மீது இருக்கிறானோ? யார் மேலினனோ -