பக்கம் எண் :

450யுத்த காண்டம் 

யார்  மேல்  இருக்கிறான்  (எங்கிருந்து போரிடுகிறான்); இன என்று -
இத்தன்மையான் என்று; அறியாம் - (நாம்) அறியோம்.
 

                                                 (94)
 

8396.‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்?’ என்று
ஆறாயிர வானவரும், அறிவின்
தேறா வகை நின்று, திரிந்துளதால்-
பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே.

 

ஆறாயிர வானவரும் - ஆறாயிரம் தேவர்களும்; நூறாயிர கோடி
கொல்
 -  நூறாயிரம்  கோடி  (குதிரைகள் போர்க்களத்தில்) உள்ளன
போலும்  (என்றும்); அன்று கொல் என்று - அன்று போலும் என்றும்
(தடுமாறி); அறிவின் தேறாவகை - அறிவின் (துணைகொண்டு) தெளிய
முடியாத  படி;   பாறு   ஆடு   களத்து   -   கழுகுகள்   பறக்கிற
போர்க்களத்தில்;  ஒரு  பாய்பரியே - (பிசாசனுடைய) ஒப்பற்ற பாயும்
தன்மை   உள்ள  குதிரை;  திரிந்து  நின்றுளது  -  சுற்றித்  திரிந்து
நிற்பதாகும். ஆல் - அசை.
 

                                                (95)
 

8397.கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
மண்ணில் திரியாத வயப் பரியே.

 

மண்ணில்   திரியாத  -   நிலத்தில்   திரிதலைச்     செய்யாத;
வயப்பரியே- (பிசாசனுடைய) வலிமையான குதிரை; கண்ணின் கடுகும்
- கண் பார்வையை  விட  விரைந்து   செல்லும்;  மனனின் கடுகும் -
மனத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும்; விண்ணில் படர் காலின்
- வானத்தில்   செல்லுகிற  காற்றைக்  காட்டிலும்;  மிகக்  கடுகும்  -
மிக வேகமாகச்  செல்லும்;  உலாய்  உள் நிற்கும் எனின் - உலவிப்
போர்க்களத்தின்  கண் நிற்கும் என்றால் (அப்போதே);  புறன்  நிற்கும்
-  அதற்கு வெளியேயும் நிற்கும்.
 

                                                 (96)
 

8398.மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
பூப் புண் தர,-ஆவி புறத்து அகல,
கோப்புண்டன, வானர வெங் குழுவே.