பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 451

மாப்புண்டர      வாசியின் - பெரிய கழுகு போன்ற குதிரையின்;
வட்டணை மேல் - சுழன்று விரைந்த நடையின் மேல்; ஆப்புண்டவன்
ஒத்தவன்
  -    கட்டப்பட்டிருப்பவனைப்  போன்றவனான  (அந்தப்
பிசாசன்   உடைய)   ;    ஆர்  அயிலால்  -  அருமையான  வேல்
படையினால்;   பூப்புண்  தர  - நிலவுலகம் புண்ணைப் பெற்றிருத்தல்
போல; வானர வெங்குழுவே - வானரங்களின் கொடிய கூட்டம்; ஆவி
புறத்து   அகல
  -   உயிர்  (உடம்பினை  விட்டுப்)  புறத்து  நீங்க;
கோப்புண்டன - இறந்து குவிந்து கிடந்தன.
 

                                                 (97)
 

8399.‘நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும்?’ எனா,
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்.

 

திறல்    ஆறும் உம்பரும் - வலிமை ஓய்ந்த தேவர்களும்; ஏறும்
நுதிவேலின்
  -  வீசி  எறிகிற  கூர்மையான  வேலினால்;  நொடிப்பு
அளவின்
 -  ஒரு  நொடிப்  பொழுதிலும்; இறைப் பொழுதில் - கண
நேரத்திலும்;  நூறும் இருநூறும் - நூறும் இருநூறும் ஆக; சீறும் கவி
சேனை
 -  சினங்கொண்ட  வானர  சேனையை;  சிதைக்கும் எனா -
(இப்பிசாசன்)  அழிக்கிறானே  என்று  சொல்லி அஞ்சினர் - அச்சம்
கொண்டார்கள். ஆல் - அசை.
 

                                                (98)
 

8400.

தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்.

 

தோற்றும்  உரு - பல இடங்களிலும் தோன்றுகின்ற வடிவம்; ஒன்று
எனவே துணியா
- ஒன்றுதான் என்று துணிந்து; கூற்றின் கொலையால்
-  கூற்றுவனுக்கு உரிய கொலைத் தொழிலோடு; உழல் கொள்கையனை
-  திரிகின்ற  கொள்கை  உடையவனான  பிசாசனை;  ஏற்றும் சிலை
ஆண்மை   இலக்குவன்
 -  நாணேற்றும்  வில்  போரில்  ஆண்மை
கொண்ட  இலக்குவன்;  காற்றின்  படை  கொண்டு  - கொடுமையான
காற்றின்  வாளியினால்; கடந்தனன் - கொன்று வீழ்த்தினான். ஆல் -
அசை.
 

                                                 (99)