பக்கம் எண் :

456யுத்த காண்டம் 

உந்தாய்       - என்னை  ஏவாமல்  விடுத்தாய்; அந்தோ - ஐயோ!
எனையாதும்    உணர்ந்திலையோ?    -   என்னுடைய  வலிமைத்
தன்மையினை  எவ்விதத்தும்  உணரவில்லை  போலும்? ஒரு நீ இடர்
கூருதியோ?
 -  (அங்ஙனம்  அறிந்து ஏவாமையின்) ஒப்பற்ற நீ துயர்
மிக்கிருக்கக் கடவையோ?
 

                                                  (4)
 

8406.‘யானே செல எண்ணுவென்; எய்த அவன்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ?

 

அவன்  எய்த  - அவ்விராமன்  இவ்விடம்  வர;  யானே  செல
எண்ணுவன்
   - (அவன் வருகையை அறிந்து) யானே (என் வஞ்சினம்
முடிக்க)  அவன்   மேல்   போர்க்குச்  செல்ல எண்ணுவன் (எனினும்);
தான்  நேர்வது   தீது   எனவே  - (தலைவனிருக்க)  தானே  ஒரு
முடிவெடுப்பது தீமையெனவே;  தணிவேன்  - அடங்கியிருக்கின்றேன்;
(அங்ஙனமன்றி) கோனே -   தலைவனே! வானே,   நிலனே முதல்
மற்றும் எலாம்
-  வானும்  நிலமும் முதலாக எல்லா இடங்களிலுமுள்ள
எல்லாப் பொருள்களும்;  எனை  வெல்லது  ஓர்  கொள்கையதோ?
-  எனை வெல்லும்  படியான தன்மை யுடையதோ?
 

தலைவனாகிய        இராவணனின்    அனுமதிக்காகக்   காத்து
அடங்கியிருந்ததல்லால்  பகை  கண்டு  அஞ்சியோ,  வென்றி குறித்து
ஐயப்பட்டோ   அடங்கி  இருக்கவில்லை  என்பதை  மகரக்கண்ணன்
தெளிவு படுத்துகின்றான்.
 

                                                  (5)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

8407.‘அருந்  துயர்க் கடலுளாள் என் அம்மனை, அழுத
                                       கண்ணள்,
பெருந் திருக் கழித்தல் ஆற்றாள்,"கணவனைக் கொன்று
                                     பேர்ந்தோன்
கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்"
                                         என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி"
                                        என்றான்.