| மகரக் கண்ணன் வதைப் படலம் | 457 |
என் அம்மனை - என்னுடைய தாய்; அழுத கண்ணாள் - அழுகின்ற கண்களை உடையவளாய்; அருந்துயர்க் கடலுளாள் - (கடத்தற்கு) அரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் - பெருமை பெற்ற மங்கல நாணை (இன்னும்) கழித்திடப் பொறுக்க முடியாதவள்; கணவனைக் கொன்று போந்தோன் - தன்னுடைய கணவனைக் கொன்றவனின் (இராமனின்); கருந்தலைக் கலத்தின் அல்லால் - கரிய தலை ஓடாகிய பாத்திரத்தாலல்லாது; கடனது கழியேன் என்றாள் - (தன்) (கணவனுக்குச் செய்ய வேண்டிய) கடனைச் செய்ய மாட்டேன் எனக் கூறிவிட்டாள்; பருந்தினுக்கு இனிய வேலாய் - (உணவளிப்பதால்) பருந்துகளுக்கு இனிமையைச் செய்கின்ற வேற்படையை உடையவனே! இன்னருள் - (தாயின் வஞ்சித்தை உடைய நோன்பினை முடித்துக் கொடுக்கும் கடமையை உடைய மகனுக்கு உதவ வேண்டும் என்ற) இனிய அருளால்; பணித்தி என்றான் - (இன்று) போர் மேற்செல்லுதற்கு எனக்குக் கட்டளை இடுக என வேண்டிக்கொண்டான். | கணவனைக் கொன்றவனைப் பழி வாங்கும் வரை மங்கல நாணைக் கழற்றாமலும் மரணச் சடங்குகளைச் செய்யாமலும் இருப்பதாய் வஞ்சினம் கூறுவது மறக்குல மகளிர் மரபு. அதனை நிறைவேற்றிக் கொடுப்பது அரச மைந்தன் முதலியோருடைய கடமை. எனவே அரச சேவையில் தன்னுடைய சொந்தக் கடமையும் சேர்ந்திருப்பதால் ‘இனிய அருளால் பணித்தி’ என இரக்கின்றான். அம்மனை-தாய். ஒருபெண் பெறுகின்ற அனைத்துச் செல்வங்களுள்ளும் உயர்ந்த செல்வம் மங்கல நாணாகையால் - ‘பெருந்திரு’ எனப்பட்டது. | (6) | மகரக் கண்ணன் போர்க்களம் போதல் | 8408. | அவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், ‘ஐய! செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீ்ர்த்தி!’ என்றான். வெவ் வழியவனும், பெற்ற விடையினன், தேர் மேற்கொண்டான், வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். |
|
|
|