பக்கம் எண் :

458யுத்த காண்டம் 

அவ்வுரை     மகரக்கண்ணன்  அறைதலும்  -  அவ்வுரையை
மகரக்கண்ணன்  உரைத்தவுடன்;  அரக்கன்  -  இராவணன்;  ஐய!  -
(அவனை   நோக்கி)   ஐயனே!   செவ்விது   -  (நீ  கூறிய  உரை)
முறைமையுடையது;  சேறி!  -  (நீ)  செல்வாயாக;  சென்று உன் பழம்
பகை  தீர்த்தி என்றான்
- சென்று உனது பழைய பகையைத் தீர்த்துக்
கொள்வாயாக  என்று சொன்னான்; பெற்ற விடையினன் - (இங்ஙனம்)
இராவணனிடமிருந்து  விடை  பெற்றவனாய்;  வரம்  பெற்று வளர்ந்த
தோளான்
 - (தேவர் முதலானவர்களிடமிருந்து) பெற்ற  வரங்களினால்
பொலிந்த  தோள்களை  உடையவனும்;  வெவ்வழியவனும் -  கொடிய
போர்   நெறிகளை   உடையவனும்     (ஆகிய  அம்மகரக்கண்ணன்);
தேர்மேற்   கொண்டான்   போனான் -  தேர்மேல்  ஏறிக்கொண்டு
(போர்க்களம் நோக்கிப்) போனான்.
 

                                                  (7)
 

8409.தன்னுடைச் சேனை வெள்ளம் ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடையச் சேனை வெள்ளம் ஓர்-ஐந்து மழையின்
                                        பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி
பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய,
                                       போனான்.

 

தன்னுடைச்சேனை - தன்னதாகிய சேனை வரிசை; வெள்ளம் ஐந்து
உடன்  தழுவ
 -  ஐந்து   வெள்ளம்  உடன்  தழுவி வரவும்; தானை
மன்னுடைச்  சேனை
 -   தானை  கொண்ட மன்னவனுடைய சேனை;
வெள்ளம்  ஓர்  ஐந்து  -  ஐந்து வெள்ளம் சேனைகளும்; மழையின்
பொங்கிப்   பின்னுடைத்தாக
 -  மேகத்தைப்  போல  ஆரவாரித்துக்
கொண்டு  தன்  பின்னே  வரவும்; பேரி கடல் படப் - பேரிகை கடல்
போல்  ஒலிக்கவும்;  பெயர்ந்த  தூளி  -  (சேனைகள் செல்லுதலால்)
எழுந்த  புழுதியால்; பொன்னுடைச்  சிமயத்து  உச்சிக்கு உச்சியும் -
பொன்  மயமான    மேருமலையின்  உச்சியிலுள்ள  சிகரமும்; புதைய,
போனான்
- மறையும் படியாக (அம்மகரக்கண்ணன்) சென்றான்.
 

பின்வரும்     8440ஆம் பாடலில் ‘பராவ அரும் வெள்ளம் பத்தும்’
என  வருதற்கேற்ப,  இங்கு ‘கோடி’ என்பது  ‘வெள்ளம் எனவும் ‘நால்’
என்பது ‘ஒர்’ எனவும் பாடம் கொள்ளப்பெற்றது.
 

                                                  (8)