| மகரக் கண்ணன் வதைப் படலம் | 459 |
8410. | ‘சோணிதக்கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த் தாள்முதல் காவல் பூண்டு செல்க’ என, ‘தக்கது’ என்னா, ஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப் போனான், நாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான். | சோணிதக்கண்ணனோடு சிங்கனும் - சோணிதக் கண்ணன் என்பவனோடு சிங்கன் என்பவனும்; துரகத் திண் தேர்த்தாள் முதல் காவல் பூண்டு செல்க என - ‘குதிரை பூட்டப்பெற்ற திண்ணிய தேர்ச் சக்கரத்திடத்துக் காவல் பூண்டு செல்வார்களாக’ என்று (இராவணன்) கூற; ‘தக்கது’ என்னா - (இராவணனுடைய இவ்வாணை) தகுதி உடையது என்று; ஆள் முதல் தானையோடும் - காலாட் படை முதலிய சேனைகளோடு; அனைவரும் தொடர - (வீரர்) யாவரும் தொடர்ந்து வர; நாள் முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய - விண்மீன்களும் கோள்களும் ஆகியவை சந்திரனைச் சேர்ந்தாற் போல; நண்பான் போனான் - நண்பர்களை உடைய மகரக்கண்ணன் புறப்பட்டுப் போனான். | (9) | 8411. | பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர் எல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய, தொல் சின யானை அம் கை விலாழி நீ்ர்த் துவலை தூற்ற, செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த, | பல்பெரும் பதாகைப் பத்தி - (அரக்கர் சேனைகள் பிடித்த) பல பெரிய கொடிகளின் வரிசைகளால்; மீமிசைத் தொடுத்த பந்தர் - மேலே தொடுக்கப்பட்ட பந்தலானது; எல்லவன் சுடர் ஒண் கற்றைமுற்ற - சூரியனது ஒளி பொருந்திய தொகுதியாகிய ஒளிக்கற்றைகளின் வெப்பம் முடிவுறும்படி; இன் நிழலை ஈய - இனிய நிழலைத் தரவும்; தொல்சின யானை அம்கை - பழையதாகிய கோபத்தையுடைய யானையினது அழகிய |
|
|
|