துதிக்கையினின்றும் உண்டாகிய; விலாழிநீ்ர்த் துவலை தூற்ற - உமிழ் நீர்த் துவலை எங்கும் சூழவும்; செல்பெருங் கவியின் சேனை - (அரக்கர் சேனையை) எதிர்த்துச் செல்லுகின்ற பெரிய குரங்குச் சேனை; அமர்த்தொழில் சிரமம் தீர்ந்த - போர்த் தொழிலால் உண்டாகிய வருத்தம் நீங்கப் பெற்றன. |
(10) |
8412. | ‘முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை, தழங்கின; வயவர் ஆர்த்தார்’ என்பதோர் முறைமை தள்ள, வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின்காறும்; புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக. |
‘முழங்கின யானை’ - யானைகள் முழங்கின; வாசி ஒலித்தன் - குதிரைகள் ஒலித்தன; முரசின் பண்ணை தழங்கின - முரசின் தொகுதிகள் ஒலித்தன; வயவர் ஆர்த்தார் - வீரர்கள் ஆர்த்தார்கள்; என்பதோர் முறைமை தள்ள - என்று கூறப்படும் ஒலி முறைமை நீங்க; பதலை ஓதை - பதலை என்னும் கருவியால் எழுந்த ஓசை; அண்டத்தின் வரம்பின்காறும் வழங்கின - அண்டம் முழுமையும் (எல்லை வரையிலும்) வழங்கின; கால்புகப் புரை இன்றாக - (அதனால்) காற்றுப் புகவும் (இயங்கவும்) இடமின்றிப் போகவே; உயிர்கள் யாவும் புழுங்கின - எல்லா உயிர்களும் வேர்த்தன. |
முழங்கின, ஒலித்தன, தழங்கின, ஆர்த்தார், வழங்கின என ஒலி குறித்த சொல்வளம் நோக்குக. |
(11) |
அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல் |
8413. | வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர் சய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர் சேர்த்தி; கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி. |