பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 461

வெய்தினின்     உற்ற தானை - விரைவாகச் சென்று பொருத்திய
சேனைகள்; முறைவிடா நூழில் வெம்போர் - போர் முறையை விடாது
கொன்று குவித்தலாகிய கொடிய போரைச் செய்தன; செருக்கிச் சென்று
நெருக்கினர்  தலைவர்
 -  (இருதிறத்துத்)  தலைவரும்  செருக்கோடு
சென்று  ஒருவரோடு  ஒருவர்  தாக்கினர்;  சேர்த்த கையொடு கைகள்
உற்றுக்  கலந்தன
- அணி வகுக்கப் பெற்ற பக்கப் படையோடு பக்கப்
படைகள் பொருந்திப் போரிட்டன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த -
இருதிற    வீரர்களுடைய  கைகளில்  பொருந்திய  கற்களும்  வில்லும்
முறையே     எறியப்பட்டனவும்  எய்யப்பட்டனவும்  ஆயின;  யானை
ஈர்த்தன   கோத்த   சோரி
 -  (அவ்விடத்துப்)  பெருகிய  இரத்தம்
யானைகளை இழுத்துச் சென்றன.
 

                                                 (12)
 

8414.வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும்-கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு
                                         ஆர்ப்ப.

 

வானர    வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி - வாரை
வீரர்கள் எடுத்து   வீசிய மலைகளை அரக்கர்கள்  பிடித்து; மீனொடு
மேகம் சிந்த விசைத்தனர்  மீட்டும் வீச
- நாள்  மீனொடு மேகமும்
கெடும்   படியாக மீளவும் (வானரர் மேல்) விரைவாய்  எறிய; கானகம்
இடியுண்டென்னக்    கவிக்குலம்   மடியும்
  -     (அம்மலைகள்
படுதலால்)  இடி  விழுந்த காட்டைப்போல    வானரக்  கூட்டங்கள்
இறக்கும்;  கவ்வி, போனகம் நுகரும்     பேய்கள்  -  (அங்ஙனம்
இறக்கின்ற வானரங்களைக்) கவ்வி உணவாக    உண்ணுகின்ற பேய்கள்;
வாய்ப்புறம் புடைப்போடு  ஆர்ப்ப - வாய்ப்புறம் புடைத்திருத்தலை
உடையனவாய் ஆரவாரிப்பன.
 

                                                 (13)
 

8415.மைந் நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்