| கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி, மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர் முன்பர். |
வானர வீரர் - வானர வீரர்கள்; மைந்நிற அரக்கர் வன்கை வயிரவாள் வலியின் வாங்கி- கரிய நிறத்தையுடைய அரக்கர்கள் தம் வலிய கையிலே பிடித்த உறுதியான வாளினை தமது வலிமையினால் பிடுங்கி; மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர் - (அவ்வரக்கர்களுடைய) உடலின் மார்புப் பகுதியில் எறிந்து கொல்லுவார்கள்; அரக்கர் முன்பர் - அரக்கரில் வலிமையுடையவர்கள்; வீரர் கைந்நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி - வானர வீரர்கள் கைகளில் நிறைய எடுத்த மலையையும் மரத்தையும் தம் கைகளினாலே பிடுங்கி; மொய்ந்நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் - (அவ்வானர வீரர்களுடைய) வலிய மார்பிலே எறிவாராய் அடித்துக் கொல்வர். |
(14) |
மகரக்கண்ணன் வஞ்சினம் |
8416. | வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை எறு என்ன, திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை, தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக் கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான். |
வண்டு உலாம் அலங்கல் மார்பன் - வண்டுகள் மொய்க்கும் படியாக மாலையை அணிந்த மார்பை உடையனும்; மகரக்கண் மழை ஏறு என்ன திண்திறல் அரக்கன் - மகரக்கண்ணையும் இடியேற்றை ஒத்த மிக்க வலிமையையும் உடைய அரக்கனாகிய மகரக்கண்ணன்; குரங்கு இனப்படையைக் கொன்றான் - குரங்குக் கூட்டமாகிய சேனையைக் கொன்றவனாய்; கொற்றப் பொன் தடஞ்சில்லித் தேரை - (தனது) வெற்றி பொருந்திய அழகிய பெரிய சக்கரத்தையுடைய தேரை; தண்டலை மருத வைப்பின் கங்கை நீ்ர் தழுவும் நாட்டு - சோலை சூழ்ந்த மருத நிலத்தைக் கொண்ட கங்கை நீரால் சூழப் பெற்ற (கோசல) நாட்டை உடைய; |