பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 463

கொண்டல்மேல்  ஓட்டிச்  சென்றான் -  மேகம்  போன்ற நிற்த்தை
உடையவனான இராமன்மேல் (போர் வேண்டி) ஓட்டிச் சென்றான்;
 

                                                  (15)
 

8417.‘இந்திரன் பகைஞனே கொல்?’ என்பது ஓர் அச்சம் எய்தி
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி;
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்:

 

இந்திரன் பகைஞனே  கொல்  என்பதோர்  அச்சம்  எய்தி -
(அவ்வாறு    மகரக்கண்ணன்   வருதலைக்  கண்ட  வானர  சேனை)
முன்னர் வந்த  இந்திரனுக்குப் பகைவனான இந்திரசித்தோ என்பதாகிய
ஒரு  பயத்தை  அடைந்து;  தந்திரம்  இரிந்து  சிந்த -  படைநிலை
கெட்டுச்  சிதறி  ஓடவும்; படைப் பெருந் தலைவர் தாக்கி எந்திரம்
எறிந்த    என்ன,   ஏவுண்டு   புரண்டார்
 -  வானர   சேனைப்
பெருந்தலைவர்கள்   அவனோடு  பொருது,  எந்திரம் எறிந்தாற் போல
(அவனால்    விடப்பட்ட)  அம்பினால்  தாக்குண்டு  புரண்டாராகவும்;
எய்தி  -   (இங்ஙனமாகப்  படை நிலை  கெடவும் தலைவர் புரளவும்
போர்    புரிந்த   வண்ணம்)   இராமனைச்  சென்றடைந்து;  சுந்தரத்
தோளினானை நோக்கி நின்று
- அழகு பொருந்திய தோளினையுடைய
அவ்விராமனை  நோக்கி  நின்று; இனைய சொன்னான் - இவ்வாறான
(கீழ்வருமாறு) சொற்களைச் சொல்பவனானான்.
 

                                                 (16)
 

8418.‘"என்னுடைத்   தாதை   தன்னை   இன்  உயிர்
                                உணடாய்" என்னும்
முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,
நின்னுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென்’
                                       என்றான்-
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும்
                            பொலம் பொன்
தாரான்.
  

பொன்னுடைத்  தாதை  -   பொன்போன்ற   நிறத்தை   உடைய
மகரந்தத்தை; வண்டு குடைந்து உணும் பொலம் பொன்தாரான் -