பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 465

கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த
                                        காலம்,
பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல் பகழி
                                     பெய்தான்.

 

உரும்   இடித்தென்ன வில்நாண் ஒலிபடுத்து - இடி இடித்தாற்
போல வில்லினது    நாண்  ஒலியைத் தோற்றுவித்து; ‘உன்னோடு
எந்தை செரு  முடித்து’
 -    ‘உன்னோடு என்  தந்தை காரணமாக
ஏற்பட்ட   போரை முடித்து;  ‘என்   கண்  நின்ற சினம் முடித்து
அமைவென்’    என்னா
-  ‘எனது     கோபத்தையும்   தீர்த்துக்
கொள்வேன்’ என்று  சொல்லி (மகரக்கண்ணன்); கருமுடித்து அமைந்த
மேகம்
- சூல் முதிரப் பெற்ற மேகம்; கால் பிடித்து எழுந்த காலம் -
(வானத்தின மீது)   மழைக்கால் பற்றி  எழுந்த  காலத்து;  பெருமுடிக்
கிரியில்    பெய்யும்  தாரை போல்,பகழி  பெய்தான்
 -  பெரிய
முகடுகளையுடைய  மலையிற்   பொழியும்   தாரைபோல் அம்புகளைச்
சொரிந்தான்.
 

                                                 (19)
 

8421.சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல்
                                       ஆகத்து,
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ
நெரிந்து எழு புருவத்தான்தன் நிறத்து உற்று நின்றது
                                        அன்றே.

 

சொரிந்தன   பகழி  எல்லாம்  -  (இராமன்)  தன்மேல்  மகரக்
கண்ணனால் ஏவப்பெற்ற எல்லா அம்புகளையும்; கூர்க் கடுங்கணைகள்
தூவி  அரிந்தனன் அகற்றி
 -  வெம்மையும்,  ஒளியும்  பொருந்திய
அம்புகனை  ஏவி  ஒடித்துத்  தள்ளி;  மற்றை  ஆண்தகை அலங்கல்
ஆகத்து
   -    ஆனபின்பு    ஆண்மைக்    குணமுள்ள   அந்த
மகரக்கண்ணனுடைய  மாலையை  அணிந்த  மார்பிலே; தெரிந்து ஒரு
பகழி பாய எய்தனன், இராமன்
- ஒரு கணை பாயும் படியாக இராமன்
ஆராய்ந்து எடுத்து ஓர்  அம்பினை எய்தான்; ஏவ - (அப்படி அவன்)
செலுத்த; நெரிந்துஎழு புருவத்தான் தன்  நிறத்து  உற்று  நின்றது
அன்றே
  -   (அவ்வம்பானது,   கோபத்தால்)   வளைந்து  எழுந்து
புருவத்தை உடைய மகரக்கண்ணனது மார்பிலே அழுந்தி நின்றது.
 

                                                  (20)