பக்கம் எண் :

466யுத்த காண்டம் 

8422.ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான்
                                   போல்வான்

தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாயி ஆயிரம் தூவி ஆர்த்தான்.
 

ஏவுண்டு    துளக்கம் எய்தா - (இரமானால் எய்யப்பட்ட) அம்பு
தைத்து  நடுங்கி; இரத்தகப் பரிதி  ஈன்ற  பூவுண்ட  கண்ணன்  -
செந்நிறத்தை  உடைய   சூரியனால் மலர்விக்கப் பெற்ற செந்தாமரைப்
பூப்போன்ற   கண்களை  உடைய  மகரக்கண்ணன்;  வாயின்  புகை
உண்டது  உமிழ்வான் போல்வான்
 -  வாயில்  முன்னமே  உண்ட
புகையைக்  கக்குபவன்  போன்றவனாகி (நெருப்பை உமிழ்ந்துகொண்டு)
தேவுண்ட  கீர்த்தி அண்ணல்  திருஉண்ட   கவசம்   சேர   -
தெய்வத்தன்மை  பொருந்திய   புகழை  உடைய  இராமனது  அழகிய
கவசத்தில்  தைக்கும் படியாக; தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி
ஆர்த்தான்
 -  (பகைவரது)  தசையில்  தோய்ந்த திண்ணிய ஆயிரம்
அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்தான்.
 

                                                 (21)
 

8423.அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்: ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாய்கி,
பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள்
                                         போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீ்ழ்த்தான்.

 

அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்- (மகரக்கண்ணன்)
அவ்விதம்   அம்பு  எய்ததைக்  கண்ட  தேவர்கள் (இப்படியும் எய்ய
முடியுமோ என) வியப்படைந்தனர்; ஆழி மன்னனும் முறுவல் எய்தி
-ஆணைச்  சக்கரத்தை  உடைய  இராமனும் புன்முறுவல் பூத்து; வாய்
அம்பு ஓர்  ஆறு  வாங்கி
- கூர்மையான ஆறு அம்புகளை எடுத்த;
பொன்நெடுந் தடந்தேர்  பூண்ட புரவியின்  குரங்கள் போக்கி  -
(அவ்வம்புகளால்)   அழகிய  நெடிய  பெரிய  தேரில்  பூட்டப்பெற்ற
குதிரைகளின்  குளம்புகளைத்  துண்டித்து; வில் நடு அறுத்து, பாகன்
தலையையும்  நிலத்து  வீழ்த்தான்
- மகரக்கண்ணன்  பிடித்திருந்த
வில்லை நடுவிடத்தே