| | மகரக் கண்ணன் வதைப் படலம் | 467 |
ஒடித்து தேர்ப்பாகனது தலையையும் பூமியில் விழும்படியாகச் செய்தான். | (22) | மகரக் கண்ணன் தவ வலிமையால் இடியும் காற்றும் விளைத்தல் | | 8424. | மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றாநின்றான், கார் உரும்ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். | மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன்- மார்பினிடத்து (இராமனால் எய்யப்பெற்று) தைத்து நின்ற அம்பின் வாயிடத்தினின்றும் வெயிலைப் போலச் செந்நிறமுடையதாக ஒழுகும் இரத்தத்தை ‘உடையவனாகிய மகரக்கண்ணன்; விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றா நின்றான் - ஓர் இமைப்பொழுதிற்குள். ஆகாயத்தினிடத்துத் தோன்றி நின்று; தவத்தின் பெற்றான் - தவத்தினால் சித்தி பெற்றவனாதலின்; கார் உரும் ஏறும், காற்றும், கனலியும் - மேகத்தில் பொருந்திய பேரிடியும், காற்றும் நெருப்பும் என்ற இவற்றை;கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்னப் பெருக்கினன் - உலகம் நிலை பெயர்ந்து அழியும் படியான ஊழிக்காலம் எனும்படி மிகுதியாக உண்டாக்கினான். | (23) | வானர சேனை சிதறுதல் | | 8425, | உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின், இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது, எங்கும் கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின் மாரி; பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. | உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன - (மகரக் கண்ணனது தவசித்தியால்) இடிகள் வரிசையாக எண்ணில்லாத கோடி |
|
|
|