பக்கம் எண் :

468யுத்த காண்டம் 

உதிர்ந்தன;  ஊழிநாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது - ஊழி
நாளைக்காட்டிலும்  இரு  மடங்கு  காற்றுச்  சீறி எழுந்தது; விழுந்தது
எங்கும்
  -   எவ்விடத்தும்   (உள்ள   பொருள்கள்  நிலைதடுமாறி)
விழுந்தன;கருமுறை நிறைந்த  மேகம்  கான்றன கல்லின்  மாரி -
கருமைத்   தன்மை  நிறைந்த  மேகங்கள்  கல்   மழை  பொழிந்தன;
பொருமுறை  மயங்கி,  சுற்றும்  இரியலின்  கவிகள்    போன -
குரங்குகள்  போர்   செய்யும்   தன்மையினின்றும் மயங்கிச்  சுற்றிலும்
நிலை கெட்டு  ஓடிப்போயின.
 

                                               (24)
 

                                        வீடணன் தந்த செய்தி
 
 

8426.போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,
‘மாயமோ? வரமோ?’ என்றான்; வீடணன் வணங்கிச்
                                     சொல்வான்:

 

கவிகள்   - குரங்குகள்; போயின திசைகள் எங்கும் புகையோடு
நெருப்புப்  போர்ப்ப
 -  (தாம்)  ஓடிய திக்குகளிலெல்லாம் புகையும்,
நெருப்பும் மூடிக்கொள்ளவும்;  செல்லும் தீ இனம் அமைய மாய மா
மாரிசிந்த
 -  மேகமும் நெருப்புத் தொகுதி பொருந்த பெரு மழையை
அழியும்படியாகப் பொழியவும்; ஆயிரம் கோடி மேலும் அவிந்தன -
(அதனால்)   ஆயிரம்   கோடிக்கும்   மிகுதியாக  மடிந்தன;  ஐயன்,
‘மாயமோ? வரமோ?’  என்றான்
 -  (அதனைக்  கண்ட)  இராமன்
(வீடணனை   நோக்கி)  ‘இது  மாயத்தினால்  நிகழ்ந்ததா?  (அல்லது)
வரத்தின்   பயனால்   உண்டானதா?’  என்று  கேட்டான்;  வீடணன்
வணங்கிச்  சொல்வான்
-  (அதைக்  கேட்ட)  வீடணன்  வணங்கிப்
பின்வருமாறு கூறலானான்.
 

                                                (25)
 

8427.‘நோற்றுடைத்  தவத்தின்  நோன்மை  நோக்கினர்
                                 கருணை நோக்கி,

காற்றுடைச் செல்வன்தானும், மழையுடைக் கடவுள்தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது’ என்றான்;

நூற்று   இதழ்க்  கமலக்  கண்ணன்,  ‘அகற்றுவென்,
                               நொடியில்’என்றான்.