| மகரக் கண்ணன் வதைப் படலம் | 469 |
காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும் - வாயுதேவனும், வருணதேவனும்; நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர் - (மகரக்கண்ணன்) செய்த தவத்தினது வலிமையைப் பார்த்து; ‘மாற்றலர்’ - (அவன் கேட்ட வரத்தை) மறுக்க முடியாதவராகி; ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் - கொடுத்த தெய்வத்தன்மையுடைய வரத்தினால் இது நிகழ்ந்துள்ளது என்றான் (வீடணன்); நூற்று இதழ்க் கமலக் கண்ணன் - (அதைக் கேட்டு) நூறு இதழ்களையுடைய தாமரைப் பூப்போலும் கண்களை உடைய இராமன்; ‘அகற்றுவென் நொடியின்’ என்றான் - ‘ஒரு நொடிப்பொழுதில் (இவற்றைப் போக்குவேன்’ என்றான்; | (26) | இராமபிரான் மாயத்தின் விளைவுகளைப் போக்குதல் | 8428. | காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும் காலக் கோல வன் சிலையில் கோத்து கொடுங் கணையோடும் கூட்டி, மேலவன் துரத்தலோடும், விசும்பின்நின்று எரிந்து, வெய்தின் மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். | காலவன் படையும் தெய்வக் கடலவன் படையும் கால - காற்றுக்கு உரிய தெய்வமான வாயு தேவனுடைய அம்பும் கடல் தெய்வமாகிய வருணதேவனுடைய அம்பும் வெளிப்படும் படியாக; கோலவன் சிலையில் கோத்து கொடுங்கணையோடும் கூட்டி - அழகிய வலிய வில்லிலே கோத்த கொடிய கணையோடுங்கூட்டி; மேலவன் துரத்தலோடும் - மேன்மை பெற்றவனாகிய இராமன் செலுத்தியவுடன்; மழையும் காற்றும் விசும்பின் நின்று எரிந்து - (மகரக்கண்ணனால்) ஏவப்பெற்ற மழையும் காற்றும் விரைவாக வானத்திலிருந்து எரிந்து கொண்டு; மால் இருங்கடலின் வீ்ழ்ந்து மறைந்தன - மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து அழிந்து போயின. | (27) |
|
|
|