பக்கம் எண் :

470யுத்த காண்டம் 

                 மகரக் கண்ணன் மாயையால் மறைந்து போரிடுதல்
 

8429.அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், ‘ஒருவன் செய்யும் வினையம்!’ என்று இனைய
                                      சொன்னான்.
 

அத்துணை, அரக்கன் நோக்கி - அவ்வளவில், மகரக் கண்ணன்
(தான்  உருவாக்கிய  மழையும் காற்றும் அழிந்ததைப்) பார்த்து; அந்தர
வானமெல்லாம் ஒத்தன உருவே  ஆக்கி
 -  இடைவெளியாயுள்ள
வானமெல்லாம்   தன்னை  ஒத்தனவாகிய  உருவங்களை  (மாயத்தால்)
தோற்றுவித்து; தான்  மறைந்து  ஒளித்து - தன் உரு வெளிப்படாமல்
மறைந்து பதுங்கி; சூலப் பத்திகள் கோடி கோடிப் பரப்பினன் - சூல
வரிசைகளைக்  கோடி  கோடியாகப்  பரப்பினான்; அதனைப் பார்த்த
வித்தகன்
 -  அதனைப்  பார்த்த  ஞான  வடிவினனாகிய இராமன்;
‘ஒருவன் செய்யும்   வினையம்’  என்று  இனைய சொன்னான் -
‘ஒருவன் செய்யும்   சூழ்ச்சி   என்னே’   (என   வியந்து)     என்று
இப்படியாகச் சொன்னான்.
 

                                                 (28)
 

                      மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்
 

8430.‘மாயத்தால்  வகுத்தான்,  யாண்டும்  வரம்பு  இலா
                               உருவம்; தான் எத்

தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன்
                                       அல்லன்;
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ எனச் சிந்தை
                                      நொந்தான்.
 

‘மாயத்தால்  யாண்டும் வரம்பிலா  உருவம்   வகுத்தான்’   -
(மகரக்கண்ணன்) மாயத்தினால் அளவில்லாத உருவத்தை