பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 471

எவ்விடத்தும்      தோன்றும்    படியாகச்    செய்தான்;    ‘தான்
எத்தேயத்தான்  என்னா     வண்ணம் கரந்தனன்
- ‘தான் எந்த
இடத்தில்   இருக்கிறான்   என்று   சொல்ல   முடியாதபடி  ஒளித்து
விட்டான்; ‘தெரிந்திலாதான்’ - (அங்ஙனம்) ஒளித்துவிட்ட   அவன்;
‘காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
- உடம்பினால் இத்தன்மையான் என்று நினைக்கும்படியான நினைவுக்கு
உட்பட்டவன் அல்லன்; ‘தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ -
‘தீயை   ஒத்தகொடியவனாகிய  அவனிடத்துச்  செய்யக்கூடிய  செயல்
யாது?’எனச் சிந்தை நொந்தான் - என்று மனம் வருந்தினான்.
 

                                                 (29)
 

8431.அம்பின்வாய்  ஆறு  சோரும்  அரக்கன்தன்  அருள்
                                     இல் யாக்கை

உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,
செம்புனல் சுவடு நோக்கி, ‘இது நெறி’ என்று, தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான்.
 

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் - (நான்  விட்ட) அம்பு
பட்ட இடத்திலிருந்து (இரத்து) ஆறு பெருகப் பெற்ற  மகரக்கண்ணன்;
தன் அருன் இல் யாக்கை  உம்பரில் பரப்பி - அருள்  இல்லமால்
வளர்ந்த தன்   உடம்பை ஆகாயத்தில் பலவாறாகத்  தோன்றச்செய்து;
தான் வேற ஒளித்தனன் என்ன  ஓர்வான் -  தான்    (அவற்றில்)
வேறாக   ஒளிந்திருக்கின்றான்    என்று   எண்ணியவனாகி;  தேவர்
தம்பிரான்
-   தேவர்களின்  தலைவனாகிய   இராமன்;  செம்புனல்
சுவடுநோக்கி
- இரத்தம் வழியும்படியான அடை யாளத்தைப் பார்தது;
‘இது நெறி’ என்று பகழி தூண்ட
- இதுவே (அவனுள்ள)இடம் எனத்
துணிந்து   (தன்)   அம்பினைச்  செலுத்த;   தலை அற்றுத்தலத்தன்
ஆனான்
- (அம்மகரக்கண்ணன்) தலை அறுபட்டுப் பூமியில் விழுந்தான்.
 

                                                 (30)
 

8432.அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும்,
                                 அரக்கன் யாக்கை,
புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,