பக்கம் எண் :

472யுத்த காண்டம் 

      வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின்   
                               விளைவினோடும்
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது-சூழ்ந்த மாயை.

 

அயில்   படைத்து   உருமின்   செல்லும்  அம்பொடும்   -
கூர்மையுடைத்தாய்    இடியைப்   போலச்   செல்லுகின்ற  இராமனது
அம்புடன்; அரக்கன் யாக்கை - மகரக்கண்ணனது உடல்; புயல் படக்
குருதி வீசி படியிடைப்  புரள்தலோடு
-   மேகம் மழை பொழிவது
போல  இரத்தத்தைப்    பொழிய  விட்டுப் பூமியில் விழுந்து புரண்ட
அளவில்; சூழ்ந்த   மாயை -   (அவனால்  விளைவிக்கப்  பெற்றுச்)
சூழ்ந்திருந்த   மாயையானது;   வெயில்    கெடுத்து     இருளை
ஓட்டும்   காலத்தின்  விளைவினோடும்
    -  சூரியன்  இருளைக்
கெடுத்து      ஓட்டும்படியா   விடியற்காலம்   தோன்றியதும்; துயில்
கெடக்    கனவு மாய்ந்தால்     ஒத்தது 
-    உறக்கம்    நீங்க
(அவ்வுறக்கத்திற்   கண்ட)   கனவு  (முற்றிலும்  பொய்யாய்) அழிந்து
போனதை ஒத்தது.
 

                                                 (31)
 

                               குருதிக்கண்ணன், சிங்கன் வீழ்ச்சி
 

8433.குருதியின்   கண்ணன்,  வண்ணக்  கொடி  நெடுந்
                                 தேரன், கோடைப்

பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப்
                                      பண்பன்,
எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்-
விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன்,
                                     வெய்யோன்.
 

வண்ணக்   கொடி நெடுந்தேரன் - அழகிய கொடி கட்டப் பெற்ற
பெரிய      தேரை      உடையவனும்;  கோடைப்      பகுதியின்
நடுவண்  தோன்றும்     பசுஞ்சுடர்       மேகப்  பண்பன்
 -
கோடைக்காலத்துச்  சூரியனிடையே   தோன்றுகின்ற   பசிய   ஒளியை
உடைய  மேகத்தின்தன்மையை உடையவனும்;  குருதியின்  கண்ணன்
- ஆகிய குருதிக்கண்ணன்; எரிகணை  சிந்தி   காலின்   எய்தான்
- நெருப்பை உமிழ்கின்ற அம்புகளை எய்துகொண்டு  காற்றைப்  போல
விரைந்து வந்தான்; விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத்