| மகரக் கண்ணன் வதைப் படலம் | 473 |
தச்சன், வெய்யோன் - (அவனை) பெரிய கடலைத் தடுத்து அணை கட்டியவனும், கொல்லும் தன்மையனும், வெம்மையான கோபத்தினால், அச்சமுறச் செய்பவனும், (பகைவர்க்கு) கொடுமையானவனும் ஆகிய நளன் (என்னும் வானரவீரன்); தன்னோடு ஏற்றான் - தன்னோடு போர் புரியுமாறு (முன்சென்று) எதிர்த்தான். | இச்செய்யுளில் தட்டான், கொல்லான், தச்சன் என்னும் சாதிப் பெயர்கள் அமைந்துள்ளமை காண்க. தட்டான் - தடுத்தவன். வெஞ்சினத்து + அச்சன் - வெஞ்சினத்தச்சன். அச்சத்தைத் தருபவன் அச்சன். கடலைத் தடுத்து அணை கட்டியவன் என்பதால் எதிர்த்தவன் நளன் என்பது பெறப்பட்டது. குருதிக்கண்ணன் - கோணதிக் கண்ணன் | (32) | 8434. | அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி, ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்; நின்றவன்-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி, சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். | அன்று, அவன் நாம வில்நாண் - அப்பொழுது, குருதிக் கண்ணன் அச்சத்தைத் தருகின்ற வில்லின் நாணை; அலங்கல் தோள் இலங்க வாங்கி - மாலையணிந்த தோள் விளங்கும் படியாக இழுத்து; ஒன்று அல பகழி மாரி - பலவாகிய அம்பு மழையை; ஊழித்தீ என்ன, உய்த்தான் - ஊழிக்காலத்துத் தீயைப் போலச் (நெருப்பு உமிழும்படியாகச்) செலுத்தினான்; நின்றவன் - அவனுடன் போருக்கு எதிரூன்றி நின்றவனாகிய நளன்;நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி - நெடியதாகிய ஒரு மரத்தினால் (அந்த அம்புகளை) அப்பாற் செல்லும்படி நீக்கி; கரியின் வாரிக்கு எதிர்படர் சீயம் அன்னான் சென்றனன் - யானைக் கூட்டத்திற்கு எதிராகச் செல்லுகின்ற சிங்கத்தை ஒத்தவனாகிச் சென்றான். | நாமம்-அச்சம். ஒன்று அல-ஒன்று அல்லாதது; பல என்றவாறு. கரியின் வாரி - யானைக் கூட்டம். | (33) |
|
|
|