8435. | கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச் சரத்தினி்ன் துணித்து வீழ்த்த தறுகணான்தன்னை நோக்கி, உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை ஒப்பான் சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். | கரத்தினில் திரியா நின்ற மரத்தினை - (தன்னுடைய) கையிலே சுழல்கின்ற மரத்தை; கண்டமாகச் சரத்தினின் துணித்து வீழ்த்த தறகணான் தன்னை நோக்கி - துண்டமாக அம்பினால் வெட்டி விழச் செய்த அஞ்சாமையை உடைய குருதிக் கண்ணனைப் பார்த்து; தன்னை ஒப்பான் - தன்னைத் தானே ஒப்பவனாகிய நளன்; உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான் - மார்பைச் சுருக்கிப் பூமியில் ஒடுங்கினான் போலப் பதுங்கி; சிரத்தினில் குதித்தான் - அவனுடைய தலையில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார் - (அதனைப் பார்த்து) தேவர்களெல்லாம் திசையிடங்களெல்லாம் பிளவுபடும்படியாக ஆரவாரித்தார்கள். | (34) | 8436. | எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன, பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை தூங்க, நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில் இட்டான். | எரியும் வெங்குன்றின் உம்பர் - நெருப்பு எரிகின்ற கொடிய மலையின்மேலே; இந்திரவில் இட்டென்ன - இந்திரவில் தோன்றினாற் போல; பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன் - வெருந்தோற்றமுள்ள குருதிக் கண்ணனது தலையின் மேல் நின்ற மிக்க அழகை உடைய நளன்; வன் கண்ணின் மூக்கின் செவிகளின் சோரி சொரிய - (குருதிக்கண்ணனது) வலிய கண்களிலும், மூக்கிலும், செவிகளிலும் இரத்தம் சொரியவும்; மூளை தூங்க - மூளை சிதைந்து வழியவும்; நெரிய வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தின் இட்டான் - (அவனது) வலிய |
|
|
|