பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 475

தலையை   நெரியும்   படியாகக்   காலால்   உதைத்து  (அவனைப்)
பூமியில் தள்ளினான்.
 

                                                  (35)
 

8437.அங்கு அவன் உலத்தலோடும், அழற்  கொழுந்து  ஒழுகும்
                                       கண்ணான்,

சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின்
                                         மேலான்,
‘எங்கு, அடா போதி?’ என்னா, எய்தினன்; எதிர் இலாத,
பங்கம் இல்மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில்
                                      பாய்ந்தாள்.
 

அங்கு அவன்  உலத்தலோடும்  -  குருதிக்  கண்ணன்  இறந்த
அளவில்; அழற்கொழுந்து ஒழுகும் கண்ணான் சிங்கன் - நெருப்பை
உமிழும்  கண்களை உடைய சிங்கன்; வெங்கணையன், வில்லன் தார்
அணி  தேரின்  மேலான்
- கொடிய அம்பை உடையவனும், வில்லை
உடையவனும்,  சிறு  மணிகள்  கட்டிய  தேரின் மேல் ஏறியவனுமாகி;
‘எங்கு அடா! போதி?’  என்னா  எய்தினன்  - (நளனைப் பார்த்து)
‘எங்கடா   போகிறாய்?’   என்று   சொல்லிக்   கொண்டே  வந்தான்
(அப்பொழுது); எதிர் இலாத,   பங்கம்   இல்மேரு   ஆற்றல்  -
கெடுதலில்லாத  மேருவைப் போன்ற ஆற்றலை உடையவனும், தனக்கு
நிகரொருவருமில்லாதவனுமாகிய;பனசன் வந்து இடையில் பாய்ந்தான்
- பனசன் (என்னும் வானர வீரன்) நடுவிலே வந்து குதித்தான்.
 

                                                  (36)
 

8438.பாய்ந்தவன் தோளில்,  மார்பில், பல்லங்கள் நல்ல
                                       பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து ஏழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக்
                                      கொண்டான்.
 

பாய்ந்தவன்    தோளில், மார்பில் - அப்படிக் குதித்த பனசனது
தோள்களிலும், மார்பிலும்;பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன -
நல்ல தகுதி நோக்கி ஆராய்ந்து எடுத்தனவாகிய அம்புகள்; அசனி