போல ஐ-இரண்டு அழுந்த எய்தான் - பத்தினை இடியைப் போல அழுந்தும்படியாக (சிங்கன்) எய்தான்; காய்ந்தனன். கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி - (அதைப் பார்த்து பனசன்) கோபித்து, நெருப்பு நெய்யால் சுடர்விட்டு எரிவது போலக் கொதித்து; ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான் - (சிங்கனை) பொருந்தி ஊர்ந்து வருகின்ற தேரோடும் ஓரிமைப்பிற்குள் (கையினால்) தூக்கினான். | (37) | 8439. | தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண ்மேருவின் தோற்றத்தான்தன் உச்சிமேல் அதனை வீச; பாரிடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய்ந்து சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளன். | தேரொடும் எடுத்தலோடு - (பனசன் சிங்கனைத்) தேரோடு தூக்கினவுடனே; நிலத்திடைக் குதித்த செங்கண் மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச - தேரினின்றும் பூமியிலே குதித்த மலைபோன்ற வடிவத்தினையும் உடைய சிங்கனது தலையின் மேல் (பனசன்) அத்தேரை வீச; பாரிடை விழுதலோடும் - அவ்வரக்கன் நிலத்தில் (அதுபட்டு) விழுந்த அளவில்; தானவன் உம்பர் பாய்ந்து சோரியும் உயிரும் சோரத் துகைத்தனன், வயிரத்தோளன் - இரத்தம் மேலே பாயவும் உயிர் சோரவும் வயிரம் போல் உறுதியான தோளை உடைய அப்பனசனானவன் (சிங்கனது உடம்பினை) மிதித்து உழக்கினான். | (38) | 8440. | தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை மராமரம், மலை என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை, பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன; பட்டிலாதார, இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார். | தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் - பூமிக்கு மன்னனாகிய தசரதனுடைய மைந்தராகிய இராம இலக்குவர் எய்கின்ற |
|
|
|