பக்கம் எண் :

 மகரக் கண்ணன் வதைப் படலம் 477

அம்புகளாலும்; கவியின்   தானை  -  குரங்குச்சேனை;   மராமரம்,
மலை என்று இன்ன வழங்கவும்
- மராமரம், மலை என்ற இவைகளை
எறிதலினாலும்;வளைந்ததானை, பராவ  அரும்  வெள்ளம் பத்தும்
பட்டன
 -  மகரக்கண்ணனைச்  சூழ்ந்து வந்த சொல்லுதற்குரிய பத்து
வெள்ளச்  சேனைகளும்  இறந்து  பட்டன;  பட்டிலாதார் இராவணன்
தூதர்போனார்    படைக்கலம் எடுத்திலாதார்
   -   படைக்கலம்
எடுக்காதவராயும்  (அதனால்)  இறவாமல்  நின்றவருமான இராவணன்
தூதர்கள் (செய்தியை உரைக்க நகருக்குச்) சென்றார்கள்.
 

தரையாகிய தலம் - தராதலம். பராவுதல் - சொல்லுதல்.
 

                                                 (39)