உலப்பறு - அளவற்ற, குப்பை - குவியல். | (3) | 8444. | வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்; அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக் குலங்களும், தேரும் மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே. | வலங்கொண்டு வணங்கி - (பின்பு தன் தந்தையை) வலம் வந்து வணங்கி; வான்செல் ஆயிரம் மடங்கல் பூண்ட - வான் வழியாகச் செல்ல வல்லதும் ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும்; பொலங்கொடி நெடுந்தேர் ஏறி - பொன் மயமான கொடியினை உடையதுமான நீண்ட தேரின் மேல் அமர்ந்து; போர்ப்பணை முழங்கப் போனான் - போர் முரசம் முழங்கப் (போர்க்களம் நோக்கி இந்திரசித்து) புறப்பட்டுப் போனான்; அலங்கல்வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் - (அவனுடன்) வெற்றிமாலை அணிந்த வாட்படை தாங்கிய அரக்கர் சேனை அறுபது வெள்ளமும்; யானைக் குலங்களும் தேரும், மாவும் - யானைக் கூட்டங்களும், தேர்களும், குதிரைகளும்; குழாம் கொளக் குழீஇய - கூட்டமாகத் திரண்டு சென்றன. | (4) | 8445. | கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி கொட்டி, பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி, கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை, அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. | கும்பிகை திமிலை செண்டை குறடு - கும்பிகை, திமிலை, செண்டை குறடு; மாப்பேரி - பெரிய பேரிகை; கொட்டி - கொடு கொட்டி; பம்பை, தார்முரசம், சங்கம் - பம்பை, தார் அணியப் பெற்ற முரசம், சங்கம்; பாண்டில், போர்ப்பணவம், தூரி - |
|
|
|