பக்கம் எண் :

482யுத்த காண்டம் 

கஞ்சதாளம்,     போருக்குரிய பணவம், தூரியம்;   கம்பலி,  உறுமை,
தக்கை,  கரடிகை
 -  கம்பலி,  உறுமை, தக்கை, கரடிகை; துடி, வேய்,
கண்டை
 - உடுக்கை, மூங்கிலால் ஆகிய வங்கியம், கண்டை; அம்பலி,
கணுவை,  ஊமை  சகடையோடு ஆர்த்த
- அம்பலி, கணுவை, ஊமை
சகடை இயங்கள் ஆரவாரித்தன.
 

போர்     மேற்செல்லும் வீரர்களுக்குப்   போர் வெறி ஊட்டுபவை
இவ்வியங்கள்.   இவை   கவிஞர்   காலத்தன    எனக்  கொள்ளவும்
இடமுண்டு.  கும்பிகை,  திமிலை,  செண்டை, குறடு,   பம்பை, பணவம்,
உறுமை, தக்கை, கண்டை, அம்பலி,   கணுவை, ஊமை, சகடை என்பன
தோற்கருவிகள்.   சங்கம்,    தூரி,  வேய்  என்பன  துளைக்கருவிகள்.
கொட்டி  - கொடு கொட்டி  என்னும் பறை. வேற் - மூங்கிலால் ஆகிய
வங்கியம் என்னும் துளைக் கருவி.
 

                                                   (5)
 

8446.

யானைமேல் பறைசால் ஈட்டத்து அறை மணி ஆர்த்தது
                                           ஆழி,
மான மாப் புரவிப் பொன்-தார்; மாக் கொடி கொண்ட
                                          மானச்
சேனையோர் கழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே.
 

யானை     மேல் பறைசால் ஈட்டத்து - யானை மேல் வைக்கப்
பட்டுள்ள  முரசுக்  கூட்டத்துடன்; அறை  மணி  ஆழி ஆர்த்தது -
தேர்ச்சக்கரங்களில்   மாறி  மாறி  ஒலிக்கின்ற  மணிகளின் ஆர்ப்பும்;
மானமாப் புரவிப்  பொன் தார் - தருக்குடன் கூடிய சிறந்த புரவிகள்
பூண்ட  பொன்னாலாகிய  கிண்கிணி  மாலையும்; மாக்கொடி கொண்ட
மானச்  சேனையோர்  கழலும் தாரும்
- பெரிய கொடிகளை ஏந்திய
குன்றாத  மானமுடைய  சேனை  வீரர்களின்  வீரக்கழலும், பொன்னரி
மாலையும்   ஆகிய   இவற்றின்  ஒலிகள்;  சேண்  தரப்  புலம்ப -
சேணளவும்  சென்றொலிப்ப;   மற்றை   வானகத்தோடும்    ஆழி
அலைஎன, வளர்ந்த
-   ஏனை   வானிடமளவும்   சென்று  படரும்
கடலின் அலைகளைப் போன்று விரிந்து உயர்ந்தன.
 

                                                   (6)
 

8447.

சங்கு   ஒலி,   வயிரின்  ஓசை,  ஆகுளி,  தழங்கு காளம்
பொங்கு  ஒலி,  வரி   கண்  பீலிப்  பேர் ஒலி, வேயின்
                                       பொம்மல்,