பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 483

சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண்
                                          கைம்
மங்குலின் அதிர்வு,-வான மழையொடு மலைந்த அன்றே.
 

சங்கொலி     - சங்கின் ஒலியும்; வயிரின் ஓசை - ஊதுகொம்பின்
ஓசையும்;  ஆகுளி  -  ஆகுளியின் ஒலியும்; தழங்கு காளம் பொங்கு
ஒலி
 -  காளம் என்னும் வாத்தியத்தினின்றும் மிக்குத் தோன்றுகின்ற
ஒலியும்;  வரிகண்  பீலிப் பேர் ஒலி - மயிற் கண் வரிந்த பீலியென்ற
வாத்தியத்தின்  பேரொலியும்;  வேயின்  பொம்மல் - புல்லாங்குழலின்
ஓசையும்;  சிங்கத்தின்  முழக்கம்  -  சிங்கத்தின் முழக்கமும்; வாசிச்
சிரிப்பு
- குதிரையின் கனைப்பொலியும்; தேர் இடிப்பு - தேரினின்றும்
தோன்றுகின்ற இடி போன்ற ஒலியும்; திண்கைம் மங்குலின் அதிர்வு -
வலிய  துதிக்கையினை  உடைய மேகம் போன்ற யானையின் ஒலியும்;
மழையொடு  மலைந்த - (ஆகிய இவை) வானத்திலுள்ள மேகங்களின்
ஒலியோடு மாறுபட்டுத் தோன்றின.
 

வயிர்  - ஊதுகொம்பு. ஆகுளி - சிறு பறை. தழங்குதல் - ஒலித்தல்,
காளம்  -  எக்காளம்,  பீலி  - சிறு சின்னம் என்னும் துளைக்கருவி.
வாசி  - குதிரை. திண்கை மங்குல் என்பது அன்மொழித் தொகையாக.
யானையைக்  குறித்தது.  (திண்மையான துதிக்கையை உடைய மேகம்.
மேகம் இங்கே யானைக்கு உருவகம்.)
 

                                                   (7)
 

8448.

பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய
                                         அன்றே.
 

பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து  ஒழுகுதீம்  தேன்  -
பண்ணைத்  தோற்றுவிக்கின்ற  சொற்களின்  தன்மையினை  உடைய
பலவகை   வாத்தியங்களினின்றும்   தோன்றும்  இனிய  இசையாகிய
தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் -