இந்திரசித்து நாண் ஒலி செய்தல் | 8452. | சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண், ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலோடு ஒப்ப, பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ் வாய் அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து நின்றான். | சென்று வெங்களத்தை எய்தி - (அங்ஙனம் தோற்றியவன்) சென்று போர்க்களத்தை அடைந்து; பின்றல் இல் வெள்ளத்தானை - பின்னிடுதல் இல்லாத வெள்ளக்கணக்கினவாகிய சேனைகள்; சிறையொடு துண்டம் செங்கண் - சிறகு, மூக்கு, சிவந்த கண்; ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலொடு, ஒப்ப - பொருத்திய கழுத்து, உடம்பு, கால், நகம், வால் என்னும் இவ்வுறுப்புக்களுக்குப் பொருந்தித் தோன்ற; முறைப்படப் பரப்பி, - முறைமைப் படப் பரப்பி நிறுத்தி; பேழ்வாய் அன்றிலின் உருவம் ஆய - பிளந்த வாயினை உடைய அன்றிற் பறவையின் உருவ அமைப்பினை உடையதாக; அணிவகுத்து, அமைந்து நின்றான் - அணிவகுத்துப் (போர் செயற்கு) பொருந்தி நின்றான். | (12) | 8453. | புரந்தான் செருவில் தந்து போயது, புணரி ஏழும் உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை கரந்தது வயிற்றில், கால வலம்புரி கையின் வாங்கி, சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள் சிந்த. | புரந்தரன் செருவில் தந்து போயது - இந்திரன் போரில் தோல்வியுற்று திறையாகத்) தந்து சென்றதும்; புணரி ஏழும் உரம் தவிர்ந்து ஊழி பேருங்காலத்தின் - கடல்கள் ஏழும் (உலகப் பொருள்களின்) திண்மையைச் சிதைத்துப் பெருகி மேலோங்கும் ஊழி இறுதி நாளிலே; ஒலிக்கும் ஓதை வயிற்றில் கரந்தது - ஆரவாரிக்கும் பேரோசையை, தன் வயிற்றினுள் அடக்கி மறைத்துள்ளதும்; கால வலம்புரி கையின் வாங்கி - காலனது |
|
|
|