தன்மையினை உடையதுமாகிய வலம்புரிச் சங்கினைக் கையிலெடுத்து; சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, திசையும் சிந்த ஊதினான் - தேவர்கள் தலை நடுக்குற்று அஞ்சவும், திசைகள் நிலை கெட்டுச் சிதையவும் ஊதினான். | (13) | 8454. | சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, தள்ளி சிங்கத்தின் நாகம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி, ‘எங்கு உற்ற?’ என்னாவண்ணம் இரிந்த போல் இரிந்த; ஏழை- பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி, ஆர்த்தான். | சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப்பெருந்தானை - வலம்புரிச் சங்கின் முழக்கத்தைக் கேட்ட வானரப் பெருஞ்சேனை,; தள்ளி - (அச்சத்தால் ஒன்றையொன்று)’ தள்ளிக் கொண்டு; சிங்கத்தின் நாதம் வந்து செவிப்புக விலங்கு சிந்தி - சிங்கத்தின் முழக்கம் வந்து தம் செவிகளிற் புக்க அளவில் விலங்குகள் (தாம் இருந்த இடங்களை விட்டுச்) சிதறி; “எங்கு உற்ற” என்னா வண்ணம் இரிந்த போல் இரிந்த - ‘எங்கே சென்றன’ என அறிந்து கொள்ள முடியாதவாறு ஓடிப் போதல்போல ஓடிப்போயின; ஏழை பங்கத்தன் மலைவில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் - (அந்நிலையில் இந்திரசித்து) பெண்ணொரு பாகனாகிய சிவபெருமானது மேரு மலையாகிய வில்லினை ஒத்த (தன்னுடைய) வில்லின் நாணொலியைப் பரவச் செய்து ஆரவாரித்தான். | (14) | வானர சேனையின் ஓட்டம் | 8455. | கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன, கால்கள், கையின் விழுந்தன, மரனும் வெற்பும்; பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க, ‘மாண்டனம் அன்றோ?’ என்ற-வானரம் எவையும் மாதோ. |
|
|
|