வானரம் எவையும் - (இந்திரசித்தின் ஆரவாரங்கேட்ட) வானரங்கள் யாவும்; கீண்டன செவிகள் - காதுகள் கிழியப் பெற்றன; நெஞ்சம் கிழிந்தன - மார்பு பிளந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன கால்கள் - உற்சாகங்கொண்டு செல்ல முடியாதனவாகக் கால்கள் திரும்பின; கையின் விழுந்தன மரனும் வெற்பும் - (ஏற்கெனவே எடுத்திருந்த) மரங்களும் மலைகளும் கைகளினின்றும் (நழுவி) விழப் பெற்றன; பூண்டன நடுக்கம் - நடுக்கம் மேற்கொண்டன; வாய்கள் புலர்ந்தன - வாய்கள் உலரப் பெற்றன; மயிரும் பொங்க ‘மாண்டனம் அன்றோ?’ என்ற - (அச்சத்தால்) மயிர்க்கூச்செறிந்து ‘நாமெல்லாம் விரைவில் இறந்தொழிவோமல்லவா?’ என அரற்றி வருந்தின. | (15) | 8456. | செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவன்தானும், அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும், வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதல வீரர் இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம். | செங்கதிர்ச் செல்வன் சேயும் - செந்நிற ஒளித் தொகுதியை உடைய செல்வனாகிய சூரியனுடைய மகன் சுக்கிரீவன்; சமீரணன் சிறுவன் தானும் - வாயுதேவனின் மகனான அனுமன்; அங்கதப் பெயரினானும் - அங்கதன் என்னும் பெயரை உடையவன்; அண்ணலும், இளைய கோவும் - இராமன், இலக்குவன்; வெங்கதிர் மௌலிச் செங்கண் வீடணன் முடிய - வெவ்விய ஒளிக்கற்றையினை உடைய (மணிகள் இழைத்த) முடியினையும் சிவந்த கண்களையும் உடைய வீடணன் வரை; வீரர் இங்கு இவர் நின்றார் - முதலாக உள்ள ஏனைய படை வீரர்களும் ஆகிய இவர்களே (போர்க்களமாகிய) இவ்விடத்தில் நின்றவர்கள்; அல்லது, இரிந்தது சேனை எல்லாம் - அல்லாமல் ஏனைய படைஞர்களாகிய குரங்குகள் அனைத்தும் நிலைகெட்டு ஓடின. | (16) | 8457. | படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருந் தானை வேலை, உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை |
|
|
|