| கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை, அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். |
படைப்பெருந் தலைவர் நிற்க - பெருமை வாய்ந்த (வானரப்) படைத்தலைவர்கள் மட்டும் (இடம் பெயராது) நிலைத்து நிற்க; பல் பெருந்தானை வேலை - மிகப்பலவாகிய (குரக்குச்) சேனையாகிய கடல்; உடைப்புறு புனலின் ஓட - கரைகளை உடைத்துச் செல்லும் பெரிய நீர்ப்பெருக்கினைப் போல் ஓட; நிருதர் சேனை - (அதுகண்ட) அரக்கர் சேனையானது; ஊழிநாள் உவரி ஓதை கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது - ஊழிக் காலத்தே தோன்றும் கடல் ஓசையினைப் போன்று பேரொலி உண்டாகுமாறு முழங்கி ஆரவாரித்து உள்ளக் கிளர்ச்சி உடையதாய்; திசைகள் எல்லாம் அடைத்தது - திசைகள் எல்லாவற்றையும் (வெற்றிடம் இல்லையாம்படி) அடைத்து நின்றது; அன்னவர் அகத்தர் ஆனார் - (இடம் பெயராது நின்ற இராம இலக்குவரும் ஏனைய படைத் தலைவரும்) அரக்கர் சேனையின் உள்ளிடத்தவராயினார். |
(17) |
அனுமன் - அங்கதர் தோள்களில் முறையே இராம-இலக்குவர் |
8458. | மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல் வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி, வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். |
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத்தோள் மேல் வீரனும் - அனுமனுடைய அசைந்தொளிரும் இயல்பினவாகிய மலர் மாலையும் மணிகளும் அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய இராமனும்; வாலி சேய் தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் - வாலி மைந்தன் அங்கதனுடைய வெற்றித் திறன் பொருந்திய மலைச் சிகரத்தை ஒத்த தோளின் மேல்; ஆரியற்கு இளையகோவும் - (இராமன் என்னும்) பெரியோனுக்குத் |