பக்கம் எண் :

490யுத்த காண்டம் 

தம்பியாகிய     இலக்குவனும்; ஏறினர்  -  (போர்  மேற்செல்ல)  ஏறி
அமர்ந்தனர்; அமரர்    வாழ்த்தி,    வேரி    அம்பூவின்  மாரி
சொரிந்தனர்,     இடைவிடாமல்
   -   (அதுகண்டு)     தேவர்கள்
(அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை
இடைவிடாது சொரிந்தார்கள்.
 

                                                  (18)
 

8459.

விடையின்மேல், கலுழன்தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடைஇல் மேல் உயர்ந்த காட்சி இருவரும்
                                கடுத்தார்-கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன்
                                   என்று
இன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல்
                                  தோன்றும் வீரர்.
 

கண்ணுற்று     அடையின்    -    கண்ணுக்குப்    புலனாகிப்
பொருந்துமாயின்;   மேருவையும்   சாய்க்கும்  அனுமன் அங்கதன்
என்று இன்னார்
- மேரு மலையையும் வீழ்த்தும், அனுமன்  அங்கதன்
என்ற  இவர்களின்; தோளின் மேல் தோன்றும் - தோள்களின் மேல்
காணப்பெறுகின்றவரும்; மேல் மலர்ந்த தொடையின் தாரர் - மேலே
விளங்கும்படியான  தொகுக்கப்பெற்ற மாலையினரும்; வில்லினர், வீரர்
- வில் தாங்கியவருமான, இராம இலக்குவர்; விடையின் மேல் கலுழன்
தன்மேல்  விளங்குகின்ற
 -  ஆனேற்றின்  மீதும்,  கருடன்  மீதும்
விளங்கித்   தோன்றுகின்ற;   கடைஇல்  மேல் உயர்ந்த காட்சி  -
முடிவின்றி   மேம்பட்டுயர்ந்த   காட்சியினை   உடைய;   இருவரும்
கடுத்தார்
 -  சிவன்,  திருமால்  என்ற இரு மூர்த்திகளையும் ஒத்துத்
தோன்றினர்.
 

                                                  (19)
 

8460.

நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமையும் காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன்,
                                  விளம்பலுற்றான்;