வந்த இராக்கத வெள்ளம் தன்னை - (பொருதற்கு) எதிர் வந்த வெள்ளக் கணக்கினவாகிய அரக்கர் சேனைகளை; இமைப்பதன் முன்னம் - இமைப்பொழுதுக்குள்ளாக; குமைத்தொழில் புரிந்த வீரர் - அழிக்கும் தொழிலைப் புரிந்த வீரர்களாகிய இராம இலக்குவரது; தனுத்தொழில் குறித்து, இன்று எம்மால் அமைப்பது என்? - விற்றொழில் வன்மையைக் குறித்து எம்மால் கூறுதற்கு யாதுளது? உமைக்கு ஒரு பாகன் - உமா தேவியை ஒரு பாகத்துக் கொண்ட சிவபெருமான்; மேரு என்று அமைந்த வில்லான் - மேரு மலை என அமைந்த வில்லினால்; எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த - எய்து அழித்த முப்புரங்களைப் போன்று (அச்சேனைகள் யாவும்) அழிந்து வீழ்ந்தன; பிறிது ஒன்று உண்டோ? - (என்பதன்றிச் சொல்லத்தக்க உவமை) வேறொன்றுளதோ? |
(23) |
8464. | தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் வீரருள் வீரன் கண்டான்-விழுந்தன விழுந்த என்னும் பாரின்மேல் நோக்கின் அன்றேல், பட்டன பட்டார் என்னும் போரின்மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல். |
பாரின் மேல் நோக்கின் - (போர்க்களமாகிய) நிலப்பரப்பின் மேல் நோக்கிய; விழுந்தன விழுந்தன என்னும் அன்றேல் - விழுந்தவை விழுந்த வண்ணமாக இருந்தன அளவில் காண்பதன்றி; பட்டன பட்டார் என்னும் போரின்மேல் நோக்க இலாத - போர் நிகழ்ச்சியை நோக்கி (இன்னவை) இறந்தன (இன்னார்) இறந்தார்கள் எனப்பிரித்தறிய வொண்ணாதவாறு; இருவரும் பொருத பூசல் - (இராம இலக்குவராகிய) இருவரும் நிகழ்த்திய போர்த்தொழிலை; தேரின் மேல் சிலையின் நின்ற - தேரின் மேல் வில்லை ஊன்றி நின்ற; இந்திரசித்து என்று ஓதும் வீரருள் வீரன் கண்டான் - ‘இந்திரசித்து’ எனப் புகழப் பெறும் வீரர்க்கெல்லாம் வீரனாகிய அவன் பொருந்த நோக்கினான். |
(24) |
8465. | ‘யானை பட்டனவோ!’ என்றான்; ‘இரதம் இற்றனவோ!’ என்றான்; ‘மான மா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ!’ என்றான்; |