பக்கம் எண் :

494யுத்த காண்டம் 

‘ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!’
                                       என்றான்-

வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம்
                                        உற்றான்.
 

வான்    உயர்   பிணத்தின்   குப்பை மறைத்தலின் மயக்கம்
உற்றான்
- (இராம    இலக்குவரது    போர்த்தொழில்   நிகழ்ச்சியை
நோக்கிய    இந்திரசித்து)    ஆகாயம்  அளவும்  ஓங்கிய பிணத்தின்
குவியல்கள்  (போர்க்களத்தை)    மறைத்தலால்    திகைப்புற்றவனாகி;
‘யானை பட்டனவோ!’ என்றான் - ‘யானைகள் இறந்து  பட்டனவோ!’
என ஏங்கினான்; ‘இரதம் இற்றனவோ!’   என்றான்   -   ‘தேர்கள்
முறிந்தனவோ?’   என    வருந்தினான்;   ‘மானமா  வந்த எல்லாம்
மறித்து  ஒழிந்தனவோ!’    என்றான்  
 -   ‘வீரத்திற்   குறையாத
பெருமை  உடையனவாய்    வந்த    குதிரைகள்   யாவும்   மாண்டு
ஒழிந்தனவோ’ என   இரங்கினான்;  ‘ஏனைவாள்  அரக்கர்  யாரும்
இல்லையோ,  எடுக்க!’ என்றான்
-  (இறந்து  வீ்ழ்ந்த  பிணங்களை)
எடுத்து அப்பாற்படுத்த மற்றும் இறவாதுள்ள வாள்  வீரராகிய  அரக்கர்
ஒருவரும் (இங்கு) இல்லையோ என ஏக்கமுற்று வருந்தினான்.
 

                                                  (25)
 

8466.

‘செய்கின்றார்   இருவர்,   வெம்   போர்;  சிதைகின்ற
                                 சேனை நோக்கின்,

“அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!” என்று,

வய்கின்றார்; அல்லர் ஆக, வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?’ என்றான்.
 

‘செய்கின்றார்     இருவர்  வெம்போர் -  ‘கொடிய  போரைச்
செய்கின்றவர்களோ   இருவரே;  சிதைகின்ற சேனை  நோக்கின்  -
(இவர்களால்)  சிதைந்தொழியும் சேனைகளை  எண்ணிப் பார்த்தாலோ;
அய்யம்தான்  இல்லா  வெள்ளம் அறுபது
 - ஐயம் அற்றவகையில்
அறுபது   வெள்ளம்  என்னும்  தொகையினவாகும்; ‘அவிக’  என்று
வய்கின்றார்  அல்லர்
- (இவையாவும் ஒருசேர) அழிந்தொழிக என்று
சபித்துரைக்கின்றவர்களும்    அல்லர்;  ஆகின் வரிசிலை வலத்தால்
மாள எய்கின்றார் அல்லர்
- ஆனால், வரிந்து