கட்டப்பெற்ற வில்லின் துணை கொண்டு தம் வன்மை விளங்க (பகைவர்சேனை) மாளும்படி வலிந்து எய்கின்றவர்களும் அல்லர்; ‘ஈது எவ் இந்திரசாலம்?’ என்றான் - (இப்பெரும் சேனையை அழித்த) இச்செயல் எத்ததைய இந்திரசால வித்தையோ?’ என்று வியந்து கூறினான் (இந்திரசித்து) |
(26) |
போர் நிகழ்ச்சியை இந்திரசித்தன் வியந்து நோக்குதல் |
8467. | அம்பின் மா மழையை நோக்கம்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்; உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை நோக்கும்; கொம்பு அற உதிர்ந்து முத்தின் குப்பையை நோக்கும்; தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்; |
அம்பின் மா மழையை நோக்கும் - (வியப்புற்ற இந்திரசித்து) அம்பின் பெருமழையை உற்றுப்பார்ப்பான்; உதிரத்தின் ஆற்றை நோக்கும் - இரத்தப் பெருக்காகிய ஆற்றினைப் பார்ப்பான்; உம்பரின் அளவும் சென்ற - விண்ணின் உச்சி அளவும் உயர்ந்து ஓங்கிய; பிணக்குன்றின் உயர்வை நோக்கும் - பிணங்களின் குவியலாகிய மலையின் உயர்ச்சியைப் பார்ப்பான்; கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் - அவ்யானைகளின் தந்தங்கள் அறுபட்டமையால் சிதறிக்கிடக்கும் முத்தின் குவியலைப் பார்ப்பான்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும் - வீரர்களாகிய இராம இலக்குவரின் அழகிய தோள்களை உற்றுப் பார்ப்பான். |
(27) |
8468. | மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த வன் கண் தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி, உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கைநோக்கும்; சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும்; |