பகைவராயினும் அவர் தம் பேராற்றலை வியந்து விரும்பி நிற்கும் இந்திரசித்தனின் பண்பைக் கூறி பகைவனும் வியந்து நிற்கும் இராம இலக்குவரின் போர்த்திறனைப் புலப்படுத்துகிறார். | (29) | 8470. | அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற, எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும், பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயதுஅல்லால், செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்; | அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற - அறுபது வெள்ளம் என்னும் அளவினராகிய அரக்கர்களின் ஆற்றலுக்குப் பொருந்தியனவாய்; எறிவன, எய்வ, பெய்வ எற்றுறு படைகள் யாவும் - (நேர் நின்று) எறிவனவும் (சேய்மையில் நின்று வில்லில் தொடுத்து) எய்வனவும், மிகுதியாகப் பொழிவனவும், எடுத்து வீசுவனவும் ஆகிய ஆயுதங்கள் யாவும்; பொறிவனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால் - தீப்பொறிகளாற் காடு வெந்து அழிந்தாற் போன்று சாம்பராய் அழிந்ததன்றி; செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும் - (அவற்றுள் எவையும் பகைவரை) நெருங்கித் தாக்குதலில்லாத் தன்மையினைத் தன் மனத்தால் விளங்க ஆராய்ந்து நோக்குவான். | (30) | 8471. | வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி. குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழைவை நோக்கும்; எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலைஇலா ஆக்கை ஈட்டம் பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்; | வயிறு அலைத்து ஓடிவந்து - அரக்க மகளிர் (தத்தம் கணவர் இறந்த செய்தி கேட்டு) வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடிவந்து; கொழுநர் மேல் மகளிர் மாழ்கி - (தத்தம்) கணவர் மேல் விழுந்து மனங்கலங்கி; குயில் தலத்து உக்க என்னக் - குயில்கள் நிலத்தில் வீழ்ந்து அரற்றின என்னும்படி; குழைகின்ற குழைவை நோக்கும் - |
|
|
|